பொது செய்தி

இந்தியா

சானிட்டைசருக்கு அதிகபட்ச விலை:மத்திய அரசு நிர்ணயம்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி: சானிட்டைசருக்கு அதிகபட்ச சில்லறை விலையை அரசு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.



latest tamil news



உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் குறித்த அச்சம் நிலவி வருகிறது. இதுவரையில் நோய் காரணமாக பல்வேறு நாடுகளில் 11 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைகளை சோப்பு போட்டு கழுவுவதை பல்வேறு ஊடகங்கள் வழியாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது முகமூடி மற்றும் சானிட்டைசர்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் எளிதில் வாங்கிபயன்படுத்த முடியாமல் அவதிப்பட துவங்கி உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரசில் இருந்து மக்களை காக்கும் விதமாக சானிட்டைசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் முகமூடி மற்றும் சானிட்டைசர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



அதிகபட்ச விலை

இதன்படி 200மில்லி எடை கொண்ட சானிட்டைசர் பாட்டிலை அதிகபட்ச விலையாக ரூ.100 வரையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.மேலும் முகமூடிகளின் விலையை அதிகபட்சமாக ரூ.10 வரையிலும் விற்பனை செய்ய வேண்டும். வரும் ஜூன் மாதம் வரையில் இந்த விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


முன்னதாக மத்திய அரசு முகமூடி, சானிட்டைசர் உட்பட தற்போதைய சூழ்நிலைக்கு தேவையான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
21-மார்-202021:46:46 IST Report Abuse
raghavan முதலில் சானி ட்டைசர் இப்போதெல்லாம் பெரிய கடைகளில் கூட கிடைப்பதில்லை. ஆனால் ஆன்லைனில் பெயர் கேள்விப்படாத பிராண்டுகளில் மிக அதிகவிலைக்கு விற்கிறார்கள். அதன் தரம் என்பது பெரிய கேள்விக்குறி. 60 சதவீதற்கு மேல் ஆல்கஹால் இருந்தால்தான் அது தரமானது என்று சொல்கிறார்கள். மேலும் நீங்கள் தரமான சானி ட்டைசர் பயன்படுத்தினாலும் அது கை முழுவதையும் , நக இடுக்கில் சுத்தப்படுத்த வாய்ப்பு இல்லை. ஆகவே உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட சோப்பையும் கூடுதலாக நீரையும் வெளியில் செல்லும்போது எடுத்து சென்று பயன்படுத்துங்கள். தரமான சானி ட்டைசர் இருந்தால் வேண்டுமானால் கூடுதலாக பயன்படுத்தலாம் இல்லையென்றால் சோப்பு போதும்.
Rate this:
Cancel
sam -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202021:25:44 IST Report Abuse
sam அந்தப் பொருளாதார புலி தான் அதெல்லாம் பண்றா.....வரி சலுகை கொடுத்து சனிடேஷன்ஸ் எல்லாம் விலை குறைவா ஃப்ரீயாக மணி நேரத்துல...... மக்கள் பாவம் சாகுறாங்க..... அதன் பெட்ரோல் பத்து ரூபாய் ஏத்தி விட்டீங்க...... அப்புறமென்ன வரியை குறைத்து மக்களை காப்பாற்ற வேண்டி தானே....... வெளியில போக கூடாது, வேலை கிடையாது, விலைவாசி உயரும் ..... எல்லா நேரத்துலயும் திருட்டு புத்தி... தூ தூ தூ.
Rate this:
Cancel
SUN MOHAN -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202021:11:20 IST Report Abuse
SUN  MOHAN சானி ட்டைசர் ,இதில உள்ள எதிர்ப்பு சக்தி அந்த சானியில் தான் உள்ளது என்பது இப்பவாது புரியுதா?
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-202021:31:29 IST Report Abuse
Janarthananயாரு உன் வாத்தி ஜோசப் ஆ ?? அல்லது உதவாத நிதி யா ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X