சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., பொதுச் செயலர் நரேந்திரன்: தமிழகத்தில், 'கொரோனா வைரஸ்' பரவி வருவதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை, மாநில தலைமை அலுவலகத்திற்கு, கட்சியினர் யாரும் வர வேண்டாம். மாநில தலைமையகத்தில், தலைவர்கள் சந்திப்பு எதுவும் நடக்காது. எனவே, தலைமை அலுவலகம் மட்டுமின்றி, தலைவர்களின் வீடுகளுக்கும் செல்வதை, கட்சியினர் தவிர்க்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: 'இந்த பக்கம் வந்துடாதீங்க...' என, நீங்கள் அலறுவதைப் பார்த்தால், கொரோனா உங்களுக்கு எல்லாம் விடுமுறை அளித்துள்ளதோ என்ற, 'டவுட்' எழுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட முஸ்லிம்களை, எதிர்க்கட்சிகள் துாண்டி விட்டனர். இரு தரப்பினரையும் சமாளிக்க, பா.ஜ., தலைவர்கள் கடும் பாடுபட்டனர். அதனால் தான் கொரோனாவை முன்னிட்டு கிடைத்த விடுமுறையை கொண்டாடுவது போல, 'வந்துடாதீங்க...' என்கிறீர்களோ?
பத்திரிகை செய்தி: தமிழக சட்டசபையில், கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் நீண்ட நேரம் விவாதித்தனர். அதற்கு பதிலளிக்க, அமைச்சர் ராஜு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். மிக விரிவாக அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வௌிநடப்பு செய்தனர்.
'டவுட்' தனபாலு: வழக்கமாக, தினமும், சட்டசபையிலிருந்து வௌிநடப்பு செய்யும், தி.மு.க.,வினர், சில நாட்களாக, வௌிநடப்பு செய்யாமல், சபைக்குள் இருந்து, நல்ல பிள்ளை மாதிரி, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தனர். அவர்களையே வௌிநடப்பு செய்யும் அளவுக்கு, அமைச்சரின் பதிலுரை இருந்தது என்றால், 'டவுட்'டே இல்லாமல், அது, நிச்சயம், 'கவனிக்கப்பட' வேண்டிய விஷயம் தான்.
ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன்: மாணவர்களைப் போல, ஆசிரியர்களும் மனிதர்கள் தான். மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என கூறும் தமிழக அரசு, ஆசிரியர்களை அவ்வாறு கூறவில்லை. ஆசிரியர்களுக்கு, கொரோனா தொற்றாதா... சுவர் இருந்தால் தானே, சித்திரம் வரைய முடியும்!
'டவுட்'தனபாலு: மாணவர்கள் சுத்தமில்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் ஓடிப்பிடித்து விளையாடி, ஒருவருக்கு தொற்றிய நோய், பிறருக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான், மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என, அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் உங்களின் அங்கலாய்ப்பு, 'டவுட்'டே இல்லாமல், மாணவர்களுக்கு லீவு கிடைத்து விட்டது என்ற பெறாமை தானே.--

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: 'கொரோனா வைரஸ்' பாதிப்பை குறைக்க, வௌிநாடு சென்று வந்தவர்கள், தங்களைத் தாங்களே வீடுகளுக்குள் தனிமைப்படுத்த, 15 ஆயிரம் ரூபாய் பரிசை, ஒடிசா மாநில அரசு வழங்குகிறது. அது போல, தமிழக அரசும் பின்பற்றி, கொரோனா பாதிப்பை தடுக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: கொரானா தடுப்புக்கு யோசனை சொல்கிறீர்களா அல்லது கஜானாவை காலி செய்ய அறிவுரை கூறுகிறீர்களா என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், வௌிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம், 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், என்னவாகும்? இந்த தொந்தரவு வேண்டாம் என்பதற்காகத் தான், இன்று முதல், வௌிநாட்டு விமானங்களுக்கு, நம் நாட்டில் தடை விதிக்கப்படுகிறது.
தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: 136 நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், 'கொரோனா' வைரஸ் தாக்கத்தை, முதல்வர், இ.பி.எஸ்., அறிவுரைகளை பின்பற்றி, பாதுகாத்துக் கொள்ளலாம். கை, கால்களை அடிக்கடி கழுவி, சுத்தபத்தமாக இருந்தால், எந்த பாதிப்பும் ஏற்படாது.
'டவுட்' தனபாலு: கொரோனா வைரஸ் ஒழிப்பு விவகாரத்திலும், முதல்வர், இ.பி.எஸ்.,சிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும், அவரின், 'குட் புக்'கில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவும் தான், 'முதல்வர் அறிவுரைப்படி நடந்தால், தப்பிக்கலாம்' என, விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறீர்கள் என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது.
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்: சுகாதார பணியில் ஈடுபடுவோர் தவிர, பிறர், சாதாரண சோப் பயன்படுத்தி, கையை கழுவினால் போதும். முக கவசம் அணிய தேவையில்லை. அனைவரும், ஹேண்ட் சானிடேஷன் மருந்து, முகக் கவசம் அணிய விரும்புவதால், அவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டிய சுகாதார பணியாளர்களுக்கு அவை கிடைக்காத சூழல் ஏற்பட்டு விடும்.
'டவுட்' தனபாலு: தலை முடி அலங்காரம், உடை, நடை, பேச்சு என எல்லாவற்றிலும், மேலை நாடுகளை பின்பற்றும் நம்மவர்கள், முககவசம் விஷயத்திலும், பின்பற்றுகின்றனரோ என்ற, 'டவுட்' எழுகிறது. நம்மவர்களில் அலப்பரையால், சுகாதாரப் பணியாளர்களுக்கு அந்த அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் போய் விடக் கூடாது. இப்போதே, 'அலெர்ட்' செய்வது நல்லது தான்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X