கொரோனா தொற்று எனக்கு இல்லை; வசுந்தரா மகிழ்ச்சி

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

புதுடில்லி:வசுந்தரா ராஜேவுக்கு நடத்தப்பட்ட கொரோனா தொற்று சோதனையில் அவருக்கும், அவரது மகன் துஷ்யந்த் சிங்குக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் வசுந்தரா ராஜே.



latest tamil news



பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பிய பின், அவர் லக்னோ சென்றுள்ளார். லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை.இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பீதி ஏற்பட்டது.அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் முன்னெச்ரிக்கையாக தன்னை தானே தனிமைப் படுத்திக் கொள்ள முடிவெடுத்தார். இதுபோலவே அவரது மகன் துஷ்யந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்தார்.

இந்தநிலையில் வசுந்தரா ராஜேவுக்கு நடத்தப்பட்ட கரோனா தொற்று சோதனையில் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனை அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அதில் தெரிவித்துள்ளதாவது: கரோனா வைரஸ் சோதனை முடிவுகளின்படி எனக்கும் எனது மகனுக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் அடுத்த 15 நாட்களுக்கு நானும் எனது மகனும் முன்னெச்சரிக்கையாக எங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
22-மார்-202017:11:15 IST Report Abuse
chakra அரசியல் வியாதிகளுக்கு எந்த நோயும் வராது
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-மார்-202014:01:48 IST Report Abuse
 Muruga Vel டில்லி ஜமா மஸ்ஜித் தலைவர் இமாம் புகாரி கொரோனாவுக்கு பயந்து மசூதிகளில் தொழுகையை நிறுத்த முடியாது என்றும் வழக்கம் போல எல்லாரும் மசூதிக்கு வர அழைப்பு கொடுத்ததை தொலைக்காட்சிகளில் காட்டினார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
22-மார்-202008:47:05 IST Report Abuse
Pandiyan அம்மணி உங்க கட்சித்தலைவர்கள் சொல்றதுக்காக கொரனவை விரட்ட......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X