சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

டிரான்ஸ்பர் மட்டும் தான் தண்டனையா கோப்பால்...?

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 டிரான்ஸ்பர் மட்டும் தான் தண்டனையா கோப்பால்...?

''எம்.எல்.ஏ., அலுவலகத்துல, இ - சேவை மையத்தை துவங்கிட்டாருங்க...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''எந்த தொகுதியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''மதுரை மத்திய தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., தியாகராஜன்... தொகுதியில, 28 இடங்கள்ல, புகார் பெட்டி வச்சிருக்கார்... இதுல, பொதுமக்கள் போடுற மனுக்களை, தினமும் சேகரித்து, உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்கிறாருங்க...''இப்ப, மாநிலத்துலயே முதல் முறையா, எம்.எல்.ஏ., அலுவலகத்துல, இ சேவை மையத்தை திறந்திருக்கார்... வருவாய்த் துறை உள்ளிட்ட அரசு சான்றிதழ்களுக்கு, இந்த மையத்துல விண்ணப்பிச்சு, இலவசமா பெறலாம்... ''ரெண்டு ஊழியர்களுக்கு, தன் சொந்தப் பணத்துல சம்பளம் குடுத்து, மையத்துல வேலைக்கு வச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கிரிக்கெட் சூதாட்டத்துல, பெரிய கைகளுக்கு தொடர்பு இருக்குது பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய, அன்வர்பாயே தொடர்ந்தார்...''சென்னை, சவுகார்பேட்டை, வேப்பேரி, மின்ட், புரசைவாக்கம் பகுதிகள்ல, வட மாநிலங்களைச் சேர்ந்த பலர் வசிக்கிறாங்க... இவங்க நிறைய தொழில்கள் பண்றதால, பணப்புழக்கம் அதிகமா இருக்கு பா...''இந்தப் பணத்தை, கிரிக்கெட் சூதாட்டத்துல முதலீடு பண்றாங்க... இது தவிர, வசதியான பெண்களை காதலிச்சு, நெருக்கமா படங்கள் எடுத்து, அதை காட்டி மிரட்டி, பெண்களிடம் பெற்றோரிடம் பணம் பறிக்குறாங்க பா...''வட மாநில இளைஞர்களின் பிளாக் மெயில், கிரிக்கெட் சூதாட்டத்துக்கு, வட மாநில வக்கீல் ஒருத்தர் தான், 'மூளை'யா இருக்கார்... இவருக்கு, பல ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கு பா...''அந்த வக்கீலின் மொபைல் போனை வாங்கி பார்த்தாலே, கிரிக்கெட் சூதாட்டத்திற்கு உடந்தையா இருக்குற போலீஸ் அதிகாரிகளின் விபரம் வெளிச்சத்திற்கு வரும்... ''இதுல, கமிஷனர் நேரடியா தலையிடணும்னு, சூதாட்டத்துல பணத்தை இழந்தவங்க புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''குணால் இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணா, ''ரவுடிகள் தொடர்புக்கு தண்டனை, வெறும் டிரான்ஸ்பர் தானான்னு புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''திருச்சி, மண்ணச்சநல்லுார் பக்கம், திருப்பைஞ்ஞீலியில, ஒரு மளிகை கடையில, போன, 2ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீச்சு நடந்துச்சு... இந்த வழக்குல, அதே ஊரைச் சேர்ந்த வக்கீல் அரியநாதன் உட்பட மூணு பேரை, மண்ணச்சநல்லுார் போலீசார் கைது பண்ணா ஓய்...''இதுல, வக்கீல் அரியநாதனுக்கு, மண்ணச்சநல்லுார் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பனோட நெருங்கிய தொடர்பு உண்டுன்னு, டி.ஐ.ஜி.,க்கு புகார்கள் போனது... இன்ஸ்பெக்டரின் மொபைல் தொடர்புகளை ஆய்வு பண்ணதுல, ரெண்டு பேரும் அடிக்கடி பேசிக்கிட்டதும், வெடிகுண்டு வழக்கு சம்பந்தமா பேசினதும் தெரிஞ்சது ஓய்...''ஆனா, இன்ஸ்பெக்டருக்கு தண்டனை என்ன தெரியுமா... ஜஸ்ட் டிரான்ஸ்பர் மட்டும் தான்... அவரை, அரியலுார், திருமானுாருக்கு இடமாறுதல் போட்டு, கதையை முடிச்சுனுட்டா ஓய்...''வெடிகுண்டு விவகாரம், கட்டப்பஞ்சாயத்து, மாமூல்னு புகுந்து விளையாடியதுக்கு, தண்டனை வெறும் டிரான்ஸ்பர் மட்டும் தானா கோப்பால்னு, நேர்மையான போலீசார் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.----

போதையில் டி.ஐ.ஜி.,யை கடுப்பேற்றிய எஸ்.ஐ.,!

''பெரிய அளவுல, வசூல் வேட்டை நடந்துருக்காமுல்லா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எங்க, யாரு பா வசூல் பண்றது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''காஞ்சிபுரம் மாவட்டத்துல, ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதிகள்ல பணியாற்ற, 17 இரவுக் காவலர்கள், 15 சமையலர்களை நியமிச்சிருக்காவ... தலா, 7 லட்சம் ரூபாய் வாங்கி, பணி நியமனம் போட்டதா புகார் எழுந்திருக்கு வே...''அமைச்சர், துறையின் இயக்குனர் பெயரைச் சொல்லி, மாவட்டத்துல இருக்கிற ரெண்டு பெண் அதிகாரிகள் கூட்டணி தான், இந்த வசூல் வேட்டையை நடத்தியிருக்கு... இது, அமைச்சருக்கும், துறையின் இயக்குனருக்கும் தெரியுமான்னு கேள்வி எழுந்திருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''தனலட்சுமியும், செந்தமிழ்ச்செல்வியும், ஸ்கூட்டியில இவ்வளவு வேகமா எங்க போறாங்க...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்த அந்தோணிசாமி, ''மதுரை போலீஸ்காரங்க பட்ட பாட்டை கேளுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''அவங்களுக்கு என்னாச்சு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''மதுரையில, தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., வேலுச்சாமி வீட்டுல, சிலர், 'டைம் பாம்' வீசி, கைதாகியிருக்காங்களே... இந்தச் சூழல்ல, மதுரை அண்ணாநகர் வைகை காலனியில, முத்துராமலிங்கம் என்பவர் வீட்டுல, 'டமார்'னு ஏதோ வெடிச்சு, அறை முழுக்க பூகை சூழ்ந்துடுச்சுங்க...''பதறி போன முத்துராமலிங்கம், போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்க, அவர் வீட்டுல குண்டு வெடிச்சுட்டதா தகவல் பரவிடுச்சு... போலீசாரும் அரக்க, பறக்க ஓடி வந்தாங்க...''கடைசியில காமெடியை கேளுங்க... அதாவது, தீபாவளிக்கு வாங்கி, வெடிக்காம இருந்த பட்டாசுகளை, ஒரு அறையில மேல வச்சிருந்திருக்காங்க...''அது மேல, கனமான பொருள் எதையோ வைக்க, அழுத்தம் தாங்காம, பட்டாசுகள் வெடிச்சது தெரிஞ்சது... அப்புறம் தான் போலீசார் நிம்மதியானாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சீக்கிரமா சொல்லுங்க பா... மணி, 7:00 ஆகுறதுக்குள்ள வீட்டுக்கு போகணும்... இன்னைக்கு சுய ஊரடங்கு கடைபிடிக்கணுமே...'' என நினைவூட்டினார், அன்வர்பாய்.''திருச்சியில, எஸ்.ஐ.,யா இருக்கற ஒருத்தர், டூட்டி நேரம் முடிஞ்சதும், நல்லா போதை ஏத்திட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு, டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணனுக்கு போனை போட்டு, சலம்பியிருக்கார்...''கடுப்பான, டி.ஐ.ஜி., அந்தப் பகுதி, டி.எஸ்.பி.,யை அழைச்சு, எஸ்.ஐ., போதையில இருக்காரான்னு செக் பண்ணும்படி உத்தரவு போட்டிருக்கார்... டி.எஸ்.பி., தேடி வரதுக்குள்ள, சுதாரிச்ச, எஸ்.ஐ., போனை, 'ஆப்' பண்ணிண்டு, 'எஸ்கேப்' ஆகிட்டார் ஓய்...''ரெண்டு நாளா, ஸ்டேஷன் பக்கமே தலைகாட்டாதவர், மூணாவது நாள், லீவ் லட்டரை மட்டும் அனுப்பிச்சிருக்கார்... அவர் மேல சீக்கிரமே நடவடிக்கை வரும்னு சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''இன்னைக்கு என் கடைக்கும் லீவ்... பிரெண்டு குமாரை பார்க்க போறேன்...'' என்றபடியே, நாயர் கிளம்ப, பெரியவர்கள் எழுந்தனர்.Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-மார்-202006:21:57 IST Report Abuse
D.Ambujavalli இது மட்டுமா? போலீஸ் திருட்டுக்கு உடந்தை, போதை கடத்தல், கொலை, ஏன் பாலியல் வன்கொடுமை, மனைவிக்கு துரோகம் என்று எதில் மாட்டினாலும் ஒரே தண்டனை, ஜஸ்ட் transfer
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X