சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'பா.ஜ.,வின் ஊதுகுழலாகவே மாறி விட்டீர்கள்; அப்பாவின், 'அட்வைஸ்' தான் காரணமா...' என, 'போட்டுத்தாக்கும்' வகையில், அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத் குமார் பேச்சு: ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகள், யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது, வரலாற்றுச் சிறப்பு மிக்க, மத்திய அரசின் முடிவை, பாராட்டுகிறோம். இப்போது, அங்கு நிலைமை சீரடைந்து வருகிறது; பொருளாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
'அண்ணன், தி.மு.க., நீங்கள், தி.க., பேஷ், பேஷ், ரொம்ப நல்லா இருக்கே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும், கடலுார் கி.கோவிந்தராஜன், என் மூத்த சகோதரர். கடலுார் நகர தி.மு.க.,வில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, செயலராக இருந்தவர். பெரியார் - மணியம்மை திருமணம் குறித்து, அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, என்னை அவர் அடித்து விட்டார். என் தந்தை அவரை கண்டித்தார். அதன் பின், நீண்ட காலமாக, நாங்கள் பேசிக் கொள்வதில்லை.
'அதை தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்; அந்த கோட்டை, அழிரப்பர் வைத்து அழிக்கப் போகிறீர்களா...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் எம்.பி., நடராஜன் பேச்சு: நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்களின் வறுமை கோட்டை முடிவு செய்ய, என்ன வரையறைகளை, மத்திய அரசு வைத்துள்ளது என்பதை விளக்க வேண்டும்.
'கலால் வரிக்கு போட்டியாகத் தான், கொரோனா வந்து விட்டதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிக்கை: சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ள நிலையில், பெட்ரோலிய பொருட்கள் மீதான, கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது, நாடு முழுவதும் உள்ள தொழில், வர்த்தகத்தை பெரிய அளவில் பாதிக்கும்.
'முன்னரே பக்குவமாக இருந்திருந்தால், கொரோனா தீவிரம் அடைந்திருக்காதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு: கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அனைத்து தரப்பினரும், பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழாவில், பக்குவமாக நடந்து கொண்டது போல, அனைத்து தரப்பினரும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
'பயிற்சி மையம் எதற்கு; குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் போதாதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேச்சு: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கும் மையங்களை, தி.மு.க., வென்ற தொகுதிகளில் ஏற்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. பல ஆண்டுகளுக்கு முன்பே, அதை தெரிவித்தேன்; இன்னும் நிறைவேறவில்லை.

---
'எப்படியாவது, மக்கள்தொகை கணக்கெடுப்பை தடுக்க வேண்டும் என்பது தான், உங்கள் கட்சியின் நோக்கமா...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ அறிக்கை: 'கொரோனா வைரஸ்' தாக்கம் பரவி வருவதால், ஏப்., 1ல், நாடு முழுவதும் துவக்கப்பட இருந்த, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை, ஒத்திவைக்க வேண்டும். கொரோனாவை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைக்கு, இது உதவிகரமாக இருக்கும்.
'உங்களின் சிதம்பரம் தொகுதியிலேயே ஏராளமான பிரச்னை இருக்கையில், காஷ்மீர் பிரச்னையை பேசுவதா...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்பேச்சு: ஜம்மு - காஷ்மீரை மூன்று யூனியன் பிரதேசங்களாக கூறு போட்டுள்ளது, மத்திய அரசு. இதற்கு, அந்த மாநிலத்தில் வாழும் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய, ஐரோப்பிய யூனியன் எம்.பி.,க்கள் குழு அங்கு சென்றுள்ளது போல, இந்திய, எம்.பி.,க்களையும் அனுப்ப வேண்டும்.
'அப்படியா...' என, ஆச்சர்யப்பட வைக்கும் வகையில், நகரத்தார் சமுதாய பிரதிநிதிகள் பேட்டி: உ.பி.,யின் அயோத்தியில், 1942 வரை, எங்கள் சமுதாயம் சார்பில் தேரோட்டம் நடத்தப்பட்டுள்ளது. 77 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், இந்த ஆண்டு முதல் அங்கு தேரோட்டம் நடத்த உள்ளோம். அதற்கு, விரிவான பல ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
'எந்த மொழிக்கு கொடுக்காவிட்டாலும், சமஸ்கிருதத்திற்கு கொடுக்கக் கூடாது என்பது தான் உங்கள் எண்ணம்...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி.சண்முகம் பேச்சு: நம் நாட்டில், தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் உட்பட, ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளன. ஆனால், பிற எல்லா மொழிகளையும் விட, சமஸ்கிருதம் மீது தான், மத்திய அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது; சமஸ்கிருதத்திற்கு தான், அதிக நிதியுதவி அளிக்கிறது.
'உலகிற்கே, நாகரிகம் கற்றுக் கொடுத்தவர்கள் நம்மவர்கள்...' என, காலரை துாக்கி விடச் செய்யும் வகையில், நடிகை பிரணீதா அறிக்கை: ஹிந்துக்களின் பழக்கமான, கைகூப்பி வணங்குவது: சைவ உணவை சாப்பிட வலியுறுத்துவது, கோவில்களுக்கு சுத்தமாக செல்வது; இறந்தவர்கள் வீடுகளுக்கு சென்று வந்த பின் குளிப்பது போன்றவற்றை கிண்டல் செய்தவர்கள், இப்போது, இது தான் சுகாதாரமான பழக்க, வழக்கம் என்கின்றனர்.
'உங்களின் தோழர் பினராயி விஜயனிடம் பேசி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது தானே...' என, கிண்டலாக கேட்கும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: தமிழக அரசிடம் அனுமதி கேட்காமல், கேரளாவின், பட்டிசேரி என்ற இடத்தில், கேரள அரசு, புதிய அணை கட்டி வருகிறது. இதனால், பாம்பாறு நீர் பிடிப்பு பகுதியில் இருந்து, தமிழகத்தின் அமராவதி ஆற்றுக்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு வெகுவாக குறையும். இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X