பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதிப்பால் அரசியல்வாதிகள்... முடக்கம் :கூட்டம் நடத்துவது தள்ளிப் போவதால் தவிப்பு

Updated : மார் 23, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
கொரோனா, பாதிப்பு, அரசியல்வாதிகள், முடக்கம், கூட்டம் நடத்துவது, தள்ளிபோவதால், தவிப்பு

தமிழகத்தில் கொரோனா அச்சம், பொது மக்களை மட்டுமின்றி, அரசியல்வாதிகளையும்
முடக்கியுள்ளது.சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும், கூட்டங்களுக்கும் அரசியல்கட்சியினர் திட்டமிட்ட நிலையில், கொரோனாவால், அனைத்தும் முடங்கியுள்ளன.

தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு அனைத்து
கட்சிகளும், தயாராகி வந்தன.தி.மு.க.,வில், அரசியல் வியூகங்கள் வகுக்கவும், ஆலோசனைகள் கூறவும், பிரபல தேர்தல் ஆலோசகர், பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அவர், தன் பணிகளை முழு வீச்சில் துவங்குவதற்கு முன், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள்,
அடுத்தடுத்து மறைந்தனர். அதைத் தொடர்ந்து, பொதுச்செயலர், அன்பழகன் மறைந்தார்.
தற்போது கொரோனா, அக்கட்சியின் அனைத்து பணிகளையும் முடக்கியுள்ளது.

பொதுச்செயலர் தேர்வு,உட்கட்சி தேர்தல் என, அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.புதிய
நிர்வாகிகள் தேர்வு, ஸ்டாலின் சுற்றுப்பயணம், கூட்டங்கள்நடத்துவது என, அடுத்தடுத்து
பணிகளை மேற்கொள்ள, தி.மு.க., தலைமை திட்டமிட்டிருந்தது; அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.அ.தி.மு.க., தரப்பில், சட்டசபை கூட்டத் தொடரில், பல்வேறு
முக்கியஅறிவிப்புகளை வெளியிட்டு, விடுபட்ட மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி
தேர்தலையும்,அனைத்து மாவட்டங்களில், நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தலையும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

கொரோனா பிரச்னையால், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிருப்தியில் உள்ளவர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' வழங்கி சமாதானப்
படுத்தலாம் என்ற, தலைமையின் கணக்கும் கேள்விக்குறியாகி விட்டது.அரசின் அனைத்து துறைகளும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், வளர்ச்சிப் பணிகளும் பாதிப்படைந்துள்ளன. அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்திருந்த, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளும், கொரோனாவால் ஏமாற்றமடைந்துள்ளன.

தமிழக, பா.ஜ.,விற்கு, நீண்ட இழுபறிக்கு பின், புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அவர் தன்
நடவடிக்கைகளை துவக்க முடியாமல், கொரோனா கட்டிப்போட்டுள்ளது.நடிகர் ரஜினி, புதிய
கட்சியை துவக்குவதற்கான, ஆரம்ப கட்டப் பணிகளை துவக்கினார்; மாவட்ட செயலர்களை
சந்தித்து,தன் கொள்கையைஅறிவித்தார்.இது, மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா, அவர் வரவை மேலும்தள்ளிப் போட்டு விட்டது.

'வரும், 31ம் தேதி வரை, வெளியில் செல்வதை தவிருங்கள்' என, மத்திய, மாநில அரசுகள்
அறிவித்துள்ளன.இது, அடுத்த மாதமும்தொடருமா என்பதுதெரியாத நிலையில்,அரசியல்
கட்சியினர், என்ன செய்வது எனத் தெரியாமல், குழப்பத்தில் உள்ளனர்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மார்-202017:23:57 IST Report Abuse
Endrum Indian தவிப்பு இல்லே??? நம்மை பிறகு இவனுங்க மதிக்கவே இல்லைன்னா அப்புறம் நமது ஒட்டு அம்பேல் ஆகிவிடும் என்ற பயம் கொண்ட தவிப்பு???
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-மார்-202014:48:01 IST Report Abuse
Lion Drsekar பேய் , பிசாசும் பில்லி, சூனியம், அனைத்து வியாதிகளையும் போக்கும் வல்லமை படைத்த தனிமனிதர்கள் காணாமல் போய்விட்டார்கள், ஆங்காங்கு மக்களை திசை திருப்புவதில் வல்லவர்களாக இவர்கள் சமீப காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பேசி, அவர்கள் இருக்கும் பிசாசுகளை பதவியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை நாளைக்கே அகற்றி தன்னுடைய விசுவாசிகளுக்கு அந்த பதவி வர பிரார்த்திடப்பாக கூக்குரல் எழுப்பிக்கொண்டு வந்த அவர்களின் இருப்பிடம் மற்றும் குரலே காணோமே வருத்தமாக இருக்கிறது, சகல வல்லமை பொருந்திய இவரால் நினைத்திருந்தால் தற்போதைய நிலையை உடனடியாக நிறுத்தியிருந்தால் பாராட்டியிருக்கலாம் , அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லையே, பாவம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
22-மார்-202013:42:25 IST Report Abuse
sridhar சுடலை தப்பித்தார். உளறி மாட்டிக்க வேண்டாம் பாருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X