பொது செய்தி

இந்தியா

சேவையாளர்களுக்கு நாடு முழுவதும் கரகோஷம்

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (14+ 31)
Share
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா ஒழிப்பில் சேவை செய்து வரும் டாக்டர்களுக்கு, சுகாதார பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் இன்று மாலை 5 மணி அளவில் அவரவர் வீடுகளின் முன்பாக சேவை செய்யும் டாக்டர்களுக்கு கை தட்டி மக்கள் நன்றி தெரிவித்தனர். பலரும் வீதிகளிலும், மொட்டை மாடிகளிலும் நின்ற படி கை தட்டினர் , மணி ஒலித்தனர். இந்த காட்சி உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
கொரோனாவை பரவ விடாமல் தடுக்கவும், மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு இன்று (22 ம் தேதி ) நாடு முழுவதும் பெரும் அமைதி ஏற்பட்டது. மக்கள் தானாகவே முன்வந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், உள்ளிட்ட பெருநகரங்கள் வெறிச்சோடின. இந்தியா முழுவதும் பெரும் அளவில் ஆதரவு கிடைத்தது.
இன்று ( 22 ம் தேதி மாலை 5 மணிக்கு ) நாட்டு மக்கள் அனைவரும் கை தட்டி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றியும் , பாராட்டும் தெரிவித்தனர்.

latest tamil newsசீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இப்போது, உலக நாடுகள் அனைத்திலும், தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில், இந்த வைரசுக்கு, இதுவரையிலும், 270க்கும் அதிக மானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து பேர் இறந்துள்ளனர்.இதையடுத்து, 'மக்கள் தனிமையில் இருக்க வேண்டும்; கூட்டம் கூடக் கூடாது; விழாக்கள் உட்பட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், 19ம் தேதி, வானொலி மற்றும் 'டிவி' வழியாக, பிரதமர், மோடி, நாட்டு மக்களிடம் பேசினார்.அப்போது, 'கொரோனா பரவலை தடுக்க, அடுத்த மூன்று வாரங்களுக்கு தனிமையில் இருக்க, மக்கள் பழக வேண்டும்; சமூக விலக்கலை கடைப்பிடிக்க வேண்டும். 'இதற்கான சோதனை முயற்சியாக, 22ம் தேதியன்று, காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணிவரை, வீட்டை விட்டு வெளியே வராமல், மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்' என, மோடி அறிவித்தார்.


ஆதரவுபிரதமரின் இந்த அறிவிப்புக்கு, மாநில அரசுகள், சமூக அமைப்புகள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துஉள்ளனர். இதையடுத்து, இன்று ஊரடங்கை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை, மாநில அரசுகள் எடுத்துள்ளன. பல மாநிலங்களில், இன்று, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களும், பயணியர் ரயில்களும் நிறுத்தப் பட்டுள்ளன. சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, செகந்திராபாத் ஆகிய நகரங்களில், குறைந்த எண்ணிக்கையில், புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.


60 சதவீதம்


இதேபோல், விமான போக்குவரத்தும் குறைக்கப்பட்டுள்ளது. 'கோ ஏர்' நிறுவனம், இன்று, விமான சேவையை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.'இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணியர், 'ஒரு ஆண்டுக்குள், இதே டிக்கெட் மூலம், எந்த நாளிலும் பயணம் செய்யலாம்' என, கோ ஏர் தெரிவித்துள்ளது.'இண்டிகோ, ஏர் விஸ்தாரா' ஆகிய நிறுவனங்கள், தங்கள் விமான சேவையை, 60 சதவீதம் குறைப்பதாக அறிவித்து உள்ளன.

'மொபைல் ஆப்' வழியாக செயல்படும், 'ஊபர், ஓலா' போன்ற, 'கால் டாக்சி' நிறுவனங்கள், இன்று தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், இன்று, ஆட்டோக்களை ஓட்டப் போவதில்லை என, அறிவித்துள்ளன. பிரதமரின் அழைப்பை ஏற்று, வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களும், தங்கள் நிறுவனங்களை இன்று திறக்கப் போவதில்லை என, அறிவித்துள்ளன. ஓட்டல்களை திறக்கப் போவதில்லை என, ஓட்டல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதனால், இன்று நாடு முழுவதும், மக்கள், வீட்டுக்குள்ளேயே முடங்குவர் என, எதிர்பார்க்கப் படுகிறது. 'தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம்' என, மக்களை, மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட, பல தரப்பும் கேட்டுக் கொண்டுள்ளன.


இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டுகொரோனாவால் அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அங்கு, 13 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை, 230 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா பரவலை தடுப்பது பற்றி, 'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்களுடன்,'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமர், மோடி, சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவின் இந்த முயற்சிக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.அமெரிக்க ராணுவ அமைச்சர், மார்க் எஸ்பர், நம் ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங்கை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேற்று முன்தினம் பேசினார். அப்போது, கொரோனா பரவலை தடுக்க, இந்தியா எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இரு தரப்பு ராணுவ உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், இருவரும் பேசினர்.இதற்கு முன் நடந்த, 'மக்கள் ஊரடங்கு'கள்கொரோனாவுக்கு எதிராக, மக்கள் ஊரடங்கு இன்று நடக்கிறது. ஆனால், இதற்கு முன் இந்தியாவில், பல மாநிலங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, மக்கள் ஊரடங்குகள் நடந்துள்ளன. சுதந்திர போராட்டத்தின் போது, 1942ல், மஹாத்மா காந்தி, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை அறிவித்தார். அப்போது, ஆங்கிலேய அரசுக்கு எதிராக, மக்கள் ஊரடங்கு நடத்த, காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

இந்தப் போராட்டத்தில், மக்கள் ஊரடங்கு தான் பெரும் முக்கியத்துவம் பெற்றது.சுதந்திரம் பெற்ற போது, மும்பை என்ற பெயரில், மஹாரஷ்டிராவும், குஜராத்தும் ஒரு மாநிலமாக இருந்தன. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது, குஜராத் மக்கள், தனி மாநிலம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1956 - 60ம் ஆண்டு வரை, 'மஹா குஜராத்' போராட்டம் நடந்தது. அப்போது, மும்பை அரசுக்கு எதிராக, 1956ம் ஆண்டு, ஆகஸ்ட், 8ம் தேதி, குஜராத் மக்கள், 'மக்கள் ஊரடங்கு' போராட்டம் நடத்தினர்.

குஜராத்தில், 1973ல், சிமன்பாய் படேல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது, 'ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது; அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது' என, குற்றஞ்சாட்டி, மாணவர் அமைப்புகள், போராட்டத்தில் ஈடுபட்டன.'நவநிர்மாண் இயக்கம்' என அழைக்கப்பட்ட இந்தப் போராட்டம், இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தது. அப்போது, பல நாட்கள், அரசுக்கு எதிராக, மக்கள் ஊரடங்குநடத்தப்பட்டது. கடைசியில், முதல்வர் சிமன்பாய் படேல் விலகிய பின்தான், போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்தப் போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தும் பங்கேற்றது. அப்போது, வித்யார்த்தி பரிஷத் பிரசாரத்தில், மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் பகுதியைப் பிரித்து, 'தனி கூர்க்காலாந்து' மாநிலம் அமைக்க கோரி, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பு போராடி வருகிறது.இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 2013ல், இரண்டு நாட்கள், டார்ஜிலிங்கில், மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது. எனினும், இப்போது தான் முதல் முறையாக, எந்த கோரிக்கையும் இன்றி, நோய் பரவலை தடுக்க, மக்கள் ஊரடங்கு நடத்தப்படுகிறது.


கைகளை தட்டி நன்றி அறிவிப்புபிரதமர், மோடி, 'டிவி'யில் பேசிய போது, 'கொரோனா வைரஸ் பாதிப்பை பற்றி கவலைப் படாமல், மற்றவர்களுக்காக சேவை செய்யும், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்தறை ஊழியர்கள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள், போலீசார், ஆட்டோ டிவைர்கள் உட்பட்டோருக்கு, மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். 'இதற்காக, 22ம் தேதி மாலை, 5:00 மணி முதல், 5:05 மணி வரை, வீட்டின் முற்றம், வாயில் மற்றும் மொட்டை மாடியில், அனைவரும் கூடி, கைகளை தட்டி, மணி அடித்து, கோஷம் எழுப்பி நன்றி தெரிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.

இதன்படி இன்று மாலை, 5:00 - 5:05 மணி வரை, வீட்டில் அனைவரும் கைகளை தட்டி பாராட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (14+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
22-மார்-202019:22:41 IST Report Abuse
ocean kadappa india வீட்டுக்கு நான்கு மூலைகள் உண்டு. ஏதாவதொரு மூலையில் உடலை தலைகீழாக சாயத்து ஒரு ஐந்து நிமிடங்கள் நிற்க செய்யலாம் இப்படி அடுத்தடுத்து அரை மணி நேரத்தில் ஆறு முறை செய்தால் இருதயம் நுரையீரல் பகுதிகளின் அடியில் தேங்கி நிற்கும் கழிவு வாசனைகளை பிடித்து மூச்சு வழியாக உள்ளே வந்து தங்கி வியாதியை கொடுக்கும் வைரஸ் கிருமிகள் தாமாகவே கலைந்து வெளியேறி விடும்.இருதயம் நுரையீரல் பகுதிகள் சுறுசுறுப்படைந்து குரோனாவுக்கு டாடா காட்டும். .. .
Rate this:
Share this comment
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
22-மார்-202019:09:33 IST Report Abuse
ocean kadappa india உஷ்ண பிரதேசங்களில் கூட கொரோனா பாய்கிறது. அங்கே இருப்பவர்களில் கூல் டிரிங்ஸ் குடித்து விட்டு ஏசி ரூம்களில் அடைபட்டவர்களிடம் தான் குரோனா அணுகும். மனித உடலை ஆடாமல் அசையாமல் வசிப்போர்களின் இருதயம் நுரையீரல் உள் பகுதிகளில் தோய்ந்த நிலையில் .இருக்கும் கழிவுகள் அப்படியே இருக்கும். மார்பு பகுதியின் இரு பக்கமும் வலமிருந்து இடப்பக்கமாக பத்து பதினைந்து முறையும் இடமிருந்து வலது பக்கமாக அதே எண்ணிக்கையில் விரிந்த கைகளால் அழுத்தி சுழற்றி தேய்க்க வேண்டும். இதேமுறையை அடி வயிற்று பகுதியிலும் செய்ய வேண்டும். இருத்யம் நுரையீரல் கிட்னி லிவர் பகுதிகள் ஆக்டிவேட்டாகி சுறுசுறுப்படையும். அவைகளில் அடைபட்டு நிற்கும் கழிவுகள் தானாக கரைந்து வெளியேறும். குரோனாவாவது வெங்காயமாவது..
Rate this:
Share this comment
Cancel
22-மார்-202016:05:37 IST Report Abuse
ஆப்பு நோ பீதி ப்ளீஸ். 144 போட்டாலும் பீதி அடைய வாணாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X