பொது செய்தி

தமிழ்நாடு

'வதந்தி பரப்பினால்...' டி.ஜி.பி., எச்சரிக்கை!

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:''கொரோனா வைரஸ் குறித்து, தவறான தகவல்கள் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.ஜி.பி., திரிபாதி கூறினார்.
கொரோனா வைரஸ் பரவுவது குறித்து, 'பேஸ்புக், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. கோழிகள் வாயிலாக, கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரப்பிய, கரூர் மாவட்டம் கூனம்பட்டியைச் சேர்ந்த, பெரியசாமி, 47, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், 30, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல வதந்தி பரப்புவோரை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், 'கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், தமிழகத்தில், 144 என்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, சமீபத்தில் தகவல் பரவியது.இது குறித்து, டி.ஜி.பி., திரிபாதி கூறுகையில், ''கொரோனா வைரஸ் குறித்து, பொது மக்களிடம் பீதி ஏற்படும் வகையில், வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
22-மார்-202012:11:26 IST Report Abuse
Dr Kannan நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா உண்மை தன்னை ஊமை ஆக்கித் தலைகுனிய வைப்பதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X