பொது செய்தி

தமிழ்நாடு

சூரியசக்தி மின் கட்டணம் ஆணைய குழு ஆலோசனை

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:மின் வாரியம் வாங்கும், சூரியசக்தி உட்பட, நான்கு வகை மின்சாரங்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின், மாநில ஆலோசனை குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது.
தமிழக மின் வாரியம், பல நிறுவனங்களிடம் இருந்து, சூரியசக்தி, காற்றாலை, சர்க்கரை ஆலை, தாவர கழிவு ஆகிய, மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வாங்குகிறது. இந்த வகை மின்சாரத்தை, ஒரு யூனிட், என்ன விலைக்கு வாங்க வேண்டும் என்ற கட்டணத்தை, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்கிறது.சூரியசக்தி மின்சாரத்திற்கு, ஆண்டுதோறும்; மற்ற வகை மின்சாரத்துக்கு, இரு ஆண்டுகளுக்கு, ஒரு முறையும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றுக்கான கட்டண ஆணை வெளியிடும் முன், அவை தொடர்பான, வரைவு அறிக்கையை ஆணையம் வெளியிட்டு, பல தரப்பினரிடமும் கருத்து கேட்கும்.தற்போது, பல மாநில மின் வாரியங்கள், தாங்களாகவே, 'டெண்டர்' கோரி, குறைந்த விலை தரும் நிறுவனங்களிடம் இருந்து, சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்தை வாங்குகின்றன. மத்திய அரசின், 'சோலார் எனர்ஜி' நிறுவனமும், அந்த இரு வகை மின்சாரத்தை மொத்தமாக வாங்கி, மாநில மின் வாரியங்களுக்கு விற்கிறது.இதையடுத்து, வரும் நிதியாண்டிற்கு, சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்தை, தமிழக மின் வாரியமே, டெண்டர் கோரியும், சோலார் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்தும் வாங்க அனுமதி அளிக்க, ஆணையம் முடிவு செய்துள்ளது. சர்க்கரை ஆலை, தாவர கழிவு மின்சாரத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.இவற்றுக்கான வரைவு அறிக்கை, பிப்ரவரி, 13, 14ல் வெளியிடப்பட்டு, இம்மாதம், அதே தேதிகள் வரை கருத்துக்கள் கேட்கப்பட்டன. இவை தொடர்பாக விவாதிக்க, சென்னை, ஆர்.கே.சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கும், மாநில ஆலோசனை குழுவின் கூட்டம், நேற்று நடந்தது.அதில், ஆணைய தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழுவில் உள்ள மின் வாரிய தலைவர், தொழில், வணிக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வரைவு அறிக்கையையே, ஆணையாக வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X