பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பில் அரசுக்கு ஒத்துழைப்பு:முஸ்லிம்களுக்கு குருமார்கள் வேண்டுகோள்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 கொரோனா தடுப்பில் அரசுக்கு ஒத்துழைப்பு:முஸ்லிம்களுக்கு குருமார்கள் வேண்டுகோள்

சென்னை:'கொரோனா' தடுப்பு நடவடிக்கையில், அரசின் உத்தரவுகளை பின்பற்றுமாறு, முஸ்லிம்களுக்கு, மசூதிகளில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உலக பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள, கொரோனா வைரஸ் தொற்று நோய், 175க்கும் மேற்பட்ட நாடுகளில், கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாடும், தங்கள் குடிமக்களை, நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்தியாவில், மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. பொது இடங்களில், மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதி வரையிலும், வழிபாட்டு தலங்களிலும், அதிகம் கூட வேண்டாம் என, கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்நிலையில், மசூதிகளில் நேற்று, வெள்ளிக்கிழமைக்கான சிறப்பு தொழுகை நடந்தது.
தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் மத்தியில், முஸ்லிம் மதகுருமார்கள் பிரசங்கம் செய்தனர். தொற்றுநோய் குறித்த தகவல்களை, மக்களுக்கு விளக்கினர்.'மக்களிடம் பரவும் நோய்கள் வந்தால், நோய் தாக்கம் குறையும் வரை, நோய் தாக்கம் உள்ள ஊருக்கு யாரும் செல்லவும் வேண்டாம்; அங்கிருந்து யாரும் வெளியே வரவும் வேண்டாம்' என, இறைத்துாதர், முகமது நபி அறிவுரை வழங்கி இருக்கிறார்.
'எனவே, கொரோனா வைரஸ் பரவும் நோயாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு மேற்கொள்ளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, முஸ்லிம்கள் ஒத்துழைத்து, அனைத்து சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்' என, மக்களுக்கு, மத குருமார்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X