பொது செய்தி

தமிழ்நாடு

டிஜிட்டல் முறையில் பிரீமியம்: எல்.ஐ.சி.,

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:பிரீமியம் கட்டணங்களை, டிஜிட்டல் முறையில் செலுத்துமாறு, எல்.ஐ.சி., நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, எல்.ஐ.சி.,யின், தென் மண்டல மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:'கொரோனா' வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு, அரசு அறிவித்துள்ளது. எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள், பிரீமியம், கடன் மற்றும் கடன்களுக்கான வட்டியை பாதுகாப்பாக, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட், இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட, டிஜிட்டல் முறை வாயிலாக செலுத்தலாம். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாயிலாக செலுத்தப்படும் தொகைக்கு, கூடுதல் கட்டணம் கிடையாது. மேலும், எங்கள் இணையதளம் மற்றும், 'மை எல்.ஐ.சி' என்ற மொபைல் செயலி வாயிலாகவும், பிரீமியத்தை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு, 022 - 6827 6827 தொலைபேசி எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X