பொது செய்தி

தமிழ்நாடு

முடக்கம்! 'கொரோனா' பாதிப்பால் அரசியல்வாதிகள்...கூட்டம் நடத்துவது தள்ளிப் போவதால் தவிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement
 முடக்கம்! 'கொரோனா' பாதிப்பால் அரசியல்வாதிகள்...கூட்டம் நடத்துவது தள்ளிப் போவதால் தவிப்பு

தமிழகத்தில் கொரோனா அச்சம், பொது மக்களை மட்டுமின்றி, அரசியல்வாதிகளையும் முடக்கியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும், கூட்டங்களுக்கும் அரசியல் கட்சியினர் திட்டமிட்ட நிலையில், கொரோனாவால், அனைத்தும் முடங்கியுள்ளன. தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும், தயாராகி வந்தன.தி.மு.க.,வில், அரசியல் வியூகங்கள் வகுக்கவும், ஆலோசனைகள் கூறவும், பிரபல தேர்தல் ஆலோசகர், பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அவர், தன் பணிகளை முழு வீச்சில் துவங்குவதற்கு முன், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், அடுத்தடுத்து மறைந்தனர். அதைத் தொடர்ந்து, பொதுச்செயலர், அன்பழகன் மறைந்தார். தற்போது கொரோனா, அக்கட்சியின் அனைத்து பணிகளையும் முடக்கியுள்ளது.பொதுச்செயலர் தேர்வு, உட்கட்சி தேர்தல் என, அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகள் தேர்வு, ஸ்டாலின் சுற்றுப்பயணம், கூட்டங்கள் நடத்துவது என, அடுத்தடுத்து பணிகளை மேற்கொள்ள, தி.மு.க., தலைமை திட்டமிட்டிருந்தது; அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.அ.தி.மு.க., தரப்பில், சட்டசபை கூட்டத் தொடரில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, விடுபட்ட மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலையும், அனைத்து மாவட்டங்களில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.கொரோனா பிரச்னையால், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிருப்தியில் உள்ளவர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' வழங்கி சமாதானப்படுத்தலாம் என்ற, தலைமையின் கணக்கும் கேள்விக்குறியாகி விட்டது.அரசின் அனைத்து துறைகளும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், வளர்ச்சிப் பணிகளும் பாதிப்படைந்துள்ளன.
அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்திருந்த, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளும், கொரோனாவால் ஏமாற்றமடைந்துள்ளன. தமிழக, பா.ஜ.,விற்கு, நீண்ட இழுபறிக்கு பின், புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அவர் தன் நடவடிக்கைகளை துவக்க முடியாமல், கொரோனா கட்டிப் போட்டுள்ளது.நடிகர் ரஜினி, புதிய கட்சியை துவக்குவதற்கான, ஆரம்ப கட்டப் பணிகளை துவக்கினார்; மாவட்ட செயலர்களை சந்தித்து, தன் கொள்கையை அறிவித்தார். இது, மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா, அவர் வரவை மேலும் தள்ளிப் போட்டு விட்டது.'வரும், 31ம் தேதி வரை, வெளியில் செல்வதை தவிருங்கள்' என, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது, அடுத்த மாதமும் தொடருமா என்பது தெரியாத நிலையில், அரசியல் கட்சியினர், என்ன செய்வது எனத் தெரியாமல், குழப்பத்தில் உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X