சம்பவம் செய்தி

தமிழ்நாடு

32 கடைகளுக்கு சென்னையில், 'சீல்'

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை;தமிழகத்தில், முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த, 32 கடைகளுக்கு, சுகாதாரத் துறையினர், 'சீல்' வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து, தமிழக மருந்தகங்களில், முகக்கவசம், 'ஹான்ட் சானிடைசர், தெர்மல் ஸ்கேனர்' உள்ளிட்ட தடுப்பு மருத்துவ சாதனங்கள், பல மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை, அதிக விலைக்கு விற்பனை செய்த, 32 கடைகளுக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொது மக்கள் அளிக்கும் புகாரின்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனை அழைத்து செல்ல பிரத்யேகமாக, 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X