எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கொடிய கொரோனா... தடுமாறும் பொருளாதாரம்

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Corona, கொடிய ,கொரோனா, தடுமாறும் ,பொருளாதாரம், சோஷியல் டிஸ்டன்சிங்

கண்ணுக்குத்தெரியாத ஓர் அணுவளவு கிருமியால் மொத்த உலகமும் மிரண்டு கிடக்கிறது. தங்களுக்குகிடையே உள்ள, சண்டை சச்சரவுகளை மறந்து, 'கோவிட்-19' என்ற கொரோனா வைரசை விரட்டுவதில் உலக நாடுகள் மும்முரமாக உள்ளன. தீவிரவாதம், எல்லை தகராறுகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, கொரோனாதான் சர்வதேச சமூகத்தின் பொது எதிரியாகி இருக்கிறது.

இது நம் தலைமுறை காணாத ஒரு அச்சுறுத்தல். ஏழை, பணக்காரர், 'வளர்ந்த நாடு - வளரும் நாடு - ஏழை நாடு' என்று எதுவும் இல்லாத நாடு என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.
பெரியண்ணன் அமெரிக்காவின் முதல் குடிமகன், டொனால்ட் டிரம்ப்கூட ஓடிப்போய் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதித்துவிட்டு வந்திருக்கிறார்.

நல்லவேளை நெகட்டிவ்!

சீனாவில் உருவெடுத்த கொரோனா, வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால், இந்தியாவிலும் தலைகாட்டியது. 'சோஷியல் டிஸ்டன்சிங்' என்று சொல்லப்படும், மக்கள் கூட்டமாக சேருவதை தவிர்ப்பதே நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பதால், நாடு முழுவதும் பல
கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டன.பெரும்பான்மையான பொதுபோக்குவரத்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ரிசார்ட்டுகள், சில வகை
ஓட்டல்கள், திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. ஏன் பிரபல ஆன்மிக தலங்கள் கூட மூடப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளால், நாட்டில், ஏர்லைன்ஸ், சுற்றுலா, பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், நடுத்தர, சிறு-குறுந்தொழில் நிறுவனங்கள், சுயதொழில் அமைப்புகள், சாலையோர தொழில்கள், அரசாங்க புள்ளி விவரங்களில் இடம்பெறாத அமைப்பு சாரா தொழில்களும் பாதிக்கப்பட்டு
உள்ளன.மார்ச் 31ம் தேதி வரை இவை செயல்பட தடை இருப்பதால், 15 நாட்களுக்கு பொருளாதார ரீதியாக, தொழில் துறையினர் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மார்ச் 31க்குப் பிறகும் விடிவுகாலம் கிடைக்குமா என்பதற்கான உத்தரவாதம் இல்லை. நோயின் தீவிரத்தை பொறுத்தே தெரியும்.


ஏற்றுமதி ஸ்தம்பிப்பு

தமிழகத்தின் தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் போன்ற நகரங்களில் இயங்கும் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தியான ஜவுளி, பனியன், இன்ஜினியரிங் பொருட்களை வெளியூர்கள் / வெளிநாடுகளுக்கு அனுப்ப
முடியவில்லை. வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் / விமானங்கள் இந்திய துறைமுகங்கள் /
ஏர்போர்ட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை...

வெளிநாட்டு சரக்கு போக்குவரத்து இல்லாததால், ஏற்றுமதி / இறக்குமதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் ஜிடிபியில் 20 சதவீதம் பங்களிப்பு தரும் ஏற்றுமதி தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. வாகன போக்குவரத்து அறவே குறைந்ததால் வாடகை வாகனங்களின் உரிமையாளர்கள் கடன் தவணையைசெலுத்துவது சில மாதங்களுக்கு
நிச்சயம் பாதிக்கும்.


எப்போது சரியாகும்?

பெரும்பாலான சிறு தொழில்கள் அமைப்புசாரா வணிகர்கள் வங்கிகளில் கடன் கிடைக்காததால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி தொழில் நடத்துகின்றனர். இவர்கள் வட்டி தவணை செலுத்த தவிக்க கூடும். வியாபாரம் ஆகிறதோ இல்லையோ தேதியை கிழித்தால், வட்டி மீட்டர் போல் ஓடுகிறது. வங்கிக் கடனுக்கும் இது பொருந்தும். தற்போதைய வைரஸ் சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது பொருளாதாரம் சரியாக இன்னும் 18 முதல் 24 மாதங்கள் ஆகலாம்.

குடிமக்களின் உயிரும், பொருளாதாரமும் ஒரு நாட்டின் இரண்டு கண்கள். அதனால்தான், இந்தியா உட்பட உலக நாடுகள், முதலில், மக்கள் உயிருக்கு முக்கியத்துவம் தந்துள்ளன. மக்களின் உயிரைக் காப்பாற்ற மத்திய அரசும் தமிழக அரசும் எடுத்திருக்கும் முயற்சிகள் மெச்சத்தக்கவை.


அள்ளிவிடுது அமெரிக்கா

முதலில் நோய் தடுப்பு நடவடிக்கையை தவறவிட்ட அமெரிக்கா பிறகு சுதாரித்துக்கொண்டு, சர்வதேச தொற்றுநோய், கோவிட்-19 என அடையாளப்படுத்தி, நாடு முழுவதும் மருத்துவ
எமர்ஜென்சி அறிவித்தது. கல்வி, வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இதனால் மக்களுக்கு - நாட்டிற்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரிசெய்யும் நடவடிக்கையிலும் உடனே களமிறங்கியது.

மாணவர்கள், முதியோர், வேலை இழக்கும் இளைஞர்கள், சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், வட்டி குறைப்பு, கடன் தள்ளுபடி போன்று ஆயிரம் பில்லியன் டாலர் (74 லட்சம் கோடி ரூபாய்)அளவுக்கு நிதி துாண்டுதல் (பிஸ்கல் ஸ்டிமுலஸ்), பண துாண்டுதல் (மானிடரி ஸ்டிமுலஸ்) நடவடிக்கைகளை அமெரிக்க அரசும், அதன் மத்திய வங்கியும் இணைந்து அறிவித்துள்ளன.

அமெரிக்கர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் டாலர் காசோலை அனுப்பி வைக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தேசித்துள்ளார். இது, வேலை - தொழில் வாய்ப்பு இழந்த மக்கள்,
மளிகை பொருட்கள், வீட்டு வாடகை செலுத்த உதவும்.கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடிவது போல உலக பணக்கார நாடு அமெரிக்கா தாராளமாக அறிவித்தாலும், ஆஸ்திரேலியோ, சீனா, தென்கொரியா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்று மற்ற நாடுகளும் தங்கள் பங்குக்கு மக்களுக்குபொருளாதார உதவிகள்அறிவித்துள்ளன.


விவசாயமும் பாதிப்பு

நிச்சயமாக அன்றாடம் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் பொதுமக்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்துறையினருக்கு மத்திய அரசு என்னென்ன
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு தரப்பிலும் நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, ஒரு குடிமகன் தொழில் செய்து நன்றாக வருமானம் பார்க்கும்போது வரி வசூலிக்கும் அரசாங்கம், அசாதாரண நிலையில் அவர் சிரமப்படும்போது அவருக்கான பரிகாரம் வழங்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. பொழுதுபோக்கு துறை, சுற்றுலா, சிறு - குறுந்தொழில்
மட்டுமல்லாமல், விவசாயிகள்கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.பல பகுதிகளில் வேளாண்
விளைபொருட்கள் சந்தையை சென்றடையவில்லை. இதனால், எளிதில் அழுகும்
பொருட்களான காய்கறி, பழங்கள் உரிய விலை பெறவில்லை.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சமீபத்தில்தான் சிறு-குறுந்தொழில்துறையினர் சந்தித்து சில சலுகைகள் பெற்று வந்தனர். அதன் பலன்அனுபவிக்கும்முன்னே கொரோனா பாதிப்பு பேரிடியாய் விழுந்துள்ளது.


என்ன செய்யலாம் மத்திய அரசு?

என்.பி.ஏ., என்று சொல்லப்படும் வராக்கடன் குறித்த வங்கிகளின் வரையறையில் மாற்றம் கொண்டு வரலாம். இன்னும் 6 மாதத்துக்கு என்.பி.ஏ., ஆகாது என்று அறிவிக்கலாம். ஒரு காலாண்டு அல்லது 2 காலாண்டுக்கு வங்கி கடன் வட்டி தள்ளுபடி அறிவிக்கலாம். ஏற்கனவே நடைமுறை மூலதனம் உள்ளவர்களுக்கு தற்காலிக கூடுதல் கடனாக 20 சதவீதம் முதல்
25 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பில் ரியலைசேஷன் காலத்தை அதிகரிக்கலாம். வரித்துறைகளில் சில சலுகைகளை அனைத்து தரப்பு மக்கள் - வணிகர்களுக்கு வழங்கலாம். பொதுவாக, ஒரு நிதியாண்டில், மார்ச் 31க்குள் செய்யப்பட்ட செலவுகளுக்கு வரி பிடித்தம்
செய்யப்படும். இந்த செலவுகள் குறித்து என்ட்ரி செய்ததும், வரியை பிடித்த அடுத்த மாதம்
அரசுக்கு செலுத்த வேண்டும். தற்போதைய சூழலில் செலவுகள் என்ட்ரி ஆகியிருக்கும். வரி செலுத்த கையில் பணமிருக்காது. எனவே, அதற்கான வரி செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் அளிக்கலாம்.

வருமான வரி பிடித்த விவரங்களை மே மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரு மாசம் அவகாசம் அளிக்கலாம் ஜி.எஸ்.டி., பிடித்தத்தை அரசுக்கு செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் அளிக்கலாம். இ.எஸ்.ஐ., -- பி.எப்., போன்றவற்றில், முதலாளி / தொழிலாளி
பங்களிப்பை மாதாமாதம் அரசுக்கு செலுத்த வேண்டும். தொழில் மந்த நிலை காரணமாக,
குறிப்பிட்ட காலத்துக்கு, வியாபார நிறுவனங்கள், தாங்கள் பிடித்தம் செய்த தொழிலாளரின் பங்கை செலுத்தினால் மட்டும் போதும் என்று அரசு அறிவிக்கலாம். எம்ப்ளாயருக்கு (முதலாளி) உரிய பங்கை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வருமான வரித்தாக்கலுக்கான கால அவகாசத்தை டிசம்பர் வரை தள்ளி வைக்கலாம். அதை கடைசி நேரத்தில் அறிவிப்பதைவிட, இப்போதே சொல்லலாம். எம்.எஸ்.எம்.இ., தொழில்துறையினர்.பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கிய சரக்குகளுக்கான தொகையை
குறிப்பிட்ட காலத்துக்குள் அல்லது உடனே வழங்கலாம். இது அரசுக்கு செலவல்ல. அந்த துறைக்கு மத்திய அரசு செய்யும் மிகப்பெரிய உதவியாகும். இதனால் வணிகர்களிடம் பணப்புழக்கம்அதிகரிக்கும்.

கொரோனா தாக்கத்தால், திகைத்துப்போய் இருக்கும் தொழில்துறையினர் மத்திய அரசிடம் முக்கியமாக கேட்பது ஒரே ஒரு கோரிக்கைதான். அது, தொழில்துறையினர் சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் எழுந்து நிற்கும் வரை அல்லது குறிப்பிட்ட காலவரையறை வரைக்கும்
வங்கித்துறையினர் - வரித்துறையினர் - அரசு துறைகள் போன்றோர், வணிகர்கள் - தொழில் துறையினருக்கு அசாதாரணமான எந்த நெருக்கடியும் தரக்கூடாதுஎன்பதுதான்.

ஊர் கூடினால்தான் தேர் இழுக்க முடியும் என்பதுபோல, எல்லா தரப்பும் இணைந்து கைகொடுத்தால்தான் இந்திய தொழில்துறை கம்பீரமாக எழுந்து நிற்கும். தன் குடிமக்களை கண் போல் காக்கும் மத்திய அரசு, அதை நிச்சயம் செய்யும்என நம்புவோம்.



பெட்ரோல் விலை குறைக்கலாம்

கொரோனா வைரஸ், தொழில்துறையில், வரலாறு காணாத அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில், சத்தமில்லாமல், கச்சா எண்ணை விலை, கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால், இந்த விலை குறைப்பின் பலன் மக்களை சென்றடையவில்லை. பெட்ரோல் விலையை கணிசமாக அரசு குறைக்கவில்லை. அதன் பலனை, இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டுள்ள வணிகர்கள் - பொதுமக்களுக்கு தரலாம். இது அரசின் பொறுப்பு
மட்டுமல்ல,கடமையும் கூட.


நாலு நாள் கூட தாங்காது



துவண்டு கிடக்கும் தொழிற்துறையினருக்கு அரசு உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே, தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலையற்ற நாட்களுக்கும் ஊதியம் வழங்கி, பணியாளர்கள்
நலனில் தொழில்துறையினர் அக்கறை செலுத்த இயலும்.இல்லாத பட்சத்தில், சிறு - குறு தொழில் புரிவோர், சாலையோர தொழில் செய்வோர், கூலிஅடிப்படையில் பணிபுரிவோர்
வருமானம் இல்லாமல் 4 நாள்கூட தாங்க முடியாது. இதனால் சமூகத்தில் அமைதியின்மை
ஏற்படும்.

- ஆடிட்டர்


ஜி.கார்த்திகேயன் -

(karthi@gkmtax.com)

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-மார்-202018:10:39 IST Report Abuse
Bhaskaran மாநில அரசு தன்னால் செய்ய கூடிய உதவிகளை அறிவித்தாயிற்று .மத்திய அரசு வரிச்சலுகைகள் நீண்ட கால கடன் உதவி போன்றவற்றை அறிவித்தே ஆகணும்
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
22-மார்-202011:37:21 IST Report Abuse
பாமரன் நல்ல அறிவுரைகள்... ஆனால் நம்மாளுங்க ஏத்துப்பாங்களான்னு பார்க்கனும்... முதலில் இப்போ இக்கட்டான நிலையில் இருப்பது ஒத்துக்கொள்ள படனும்... வழக்கம் போல நேரு காரணமா சொல்லாமல் இருந்தால் பாதி சந்தோஷம்...
Rate this:
Share this comment
Cancel
VNS - chennai,இந்தியா
22-மார்-202010:06:05 IST Report Abuse
VNS Well Said. Hope both the central and state Governments will do the good for the people.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X