சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச இணையதளத்தில்  நிர்வாண படம்:நடிகை மீரா மிதுன் புகார்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 ஆபாச இணையதளத்தில்  நிர்வாண படம்:நடிகை மீரா மிதுன் புகார்

சென்னை:'ஆபாச இணையதளத்தில், 'மார்பிங்' செய்யப்பட்ட என் நிர்வாண படத்தையும், மொபைல் எண்ணையும் பதிவிட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் புகார் அளித்துள்ளார்.
மாடல் அழகியாக இருந்தவர் மீரா மிதுன் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அழகிப் போட்டி உள்பட, பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், அவ்வப்போது தன் கவர்ச்சிப் படங்களை, சமூக வலைதளத்தில் பதிவேற்றி வந்தார்.இந்நிலையில், 'மார்ப்' செய்யப்பட்ட இவரது படங்கள், ஆபாச இணையதளத்தில் மொபைல் எண்ணுடன் பகிரப்பட்டுள்ளன.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மீரா மிதுன், 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், என்ன செய்கின்றனர் எனத் தெரிய வில்லை. என் மொபைல் எண், 'மார்ப்' செய்யப்பட்ட என் படங்கள், ஆபாச இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன.இவ்வாறு கூறியுள்ள மீரா மிதுன், தன் டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியையும், 'டேக்' செய்து, அவரது கவனத்திற்கும் தன் பதிவை எடுத்துச் சென்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இருங்கடா - Kitchener,கனடா
23-மார்-202016:45:28 IST Report Abuse
இருங்கடா நீ கண்டபடி காட்டுவ அப்புறம் சைபர் போலீஸ் எனப்பண்ணுதுனு கேப்பா.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-மார்-202005:20:09 IST Report Abuse
Sanny முழுக்க நனைத்தபின் முக்காடு எதுக்கு,
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
22-மார்-202013:44:43 IST Report Abuse
Apposthalan samlin கைலாச நாட்டுக்கு நித்யானந்தா கூப்பிட்டால் போவேன் என்று சொன்ன பய புள்ள தானே .
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
22-மார்-202023:07:09 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுநித்திக்கு உடம்பெல்லாம் மச்சம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X