ஆபாச இணையதளத்தில்  நிர்வாண படம்:நடிகை மீரா மிதுன் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச இணையதளத்தில்  நிர்வாண படம்:நடிகை மீரா மிதுன் புகார்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (6)
Share
 ஆபாச இணையதளத்தில்  நிர்வாண படம்:நடிகை மீரா மிதுன் புகார்

சென்னை:'ஆபாச இணையதளத்தில், 'மார்பிங்' செய்யப்பட்ட என் நிர்வாண படத்தையும், மொபைல் எண்ணையும் பதிவிட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் புகார் அளித்துள்ளார்.
மாடல் அழகியாக இருந்தவர் மீரா மிதுன் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அழகிப் போட்டி உள்பட, பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், அவ்வப்போது தன் கவர்ச்சிப் படங்களை, சமூக வலைதளத்தில் பதிவேற்றி வந்தார்.இந்நிலையில், 'மார்ப்' செய்யப்பட்ட இவரது படங்கள், ஆபாச இணையதளத்தில் மொபைல் எண்ணுடன் பகிரப்பட்டுள்ளன.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மீரா மிதுன், 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், என்ன செய்கின்றனர் எனத் தெரிய வில்லை. என் மொபைல் எண், 'மார்ப்' செய்யப்பட்ட என் படங்கள், ஆபாச இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன.இவ்வாறு கூறியுள்ள மீரா மிதுன், தன் டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியையும், 'டேக்' செய்து, அவரது கவனத்திற்கும் தன் பதிவை எடுத்துச் சென்றுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X