பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பரவ நாம் காரணமாகி விடக் கூடாது: கமல் எச்சரிக்கை

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:'கொரோனா வைரஸ் பாதிப்பில், நான்காவது வாரத்தில், தமிழகம் உள்ளது. இந்த நேரத்தில், விழிப்புடன் இருந்து, நோய் பரவ, நாம் காரணமாகாமல் இருப்போம்' என, நடிகர் கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் வெளியிட்ட வீடியோ பதிவு:கொரோனா வைரஸ் பாதிப்பு, நான்கு மற்றும் ஐந்தாவது வாரத்தில், பன்மடங்கு அதிகமாகிறது என்பதை, பல நாடுகளில் பார்த்துள்ளோம். வைரஸ் தொற்று பாதிப்பு வெளியே தெரியாத போது, பாதித்தவர்கள் பல இடங்களுக்கு சென்று இருப்பர்.பாதித்தது, ஐந்து பேர் என்றால், அவர்களிடமிருந்து, 25 பேருக்கு பரவும்; அவர்களிடமிருந்து இன்னும், 100 பேருக்கு பரவாமல் இருக்க, ஒரே வழிதான் உண்டு; அது, விலகி இருத்தல்.
தற்போது, நான்காவது வாரத்தில், தமிழகம் உள்ளது. இந்த நேரத்தில், கூட்டம் கூடும் இடங்களை தவிர்த்திடுங்கள்.அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, வெளியே வாங்க. இதன் வாயிலாக, வைரஸ் பரவாமல் தடுக்கலாம்.கொரோனா தொற்று இருந்தாலே, உயிருக்கு ஆபத்து என்பது கிடையாது. உடல் நிலையை பொறுத்து, அது ஆபத்தாக மாறலாம். அதனால் தான், விலகி இருப்பது அவசியம். குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். வந்தால் செய்ய வேண்டியதை, வரும் முன்பே செய்வோம். நமக்கு ஒன்றும் வராது என்ற நினைப்பிலோ, அசட்டு தைரியத்தாலோ, இந்த நோய் பரவ, நாம் காரணமாக இருக்கக் கூடாது; முன்னெச்சரிக்கை முக்கியம்.வீட்டில் இருந்தால், வருமானத்திற்கு என்ன செய்றது; பள்ளி கட்டணம் இருக்கிறதே என, பல குழப்பம், பல கேள்விகள் இருந்தாலும், இதை எல்லாம் செய்ய, உடல் நலத்துடன் இருப்பது அவசியம். பிள்ளைகள் படிப்பு, தொழில் போன்ற நியாயமான பயங்களை, கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, இந்த இரண்டு வாரத்தை, எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை பாருங்கள்.
அது தான், இப்போதைக்கு, ஒரே வழி. இந்த இரண்டு வாரத்திலும், குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். கற்றுக் கொள்ள முடியாமல் போன விஷயங்களை, இந்த நேரத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அவசர கால சமையலை, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். காலத்தின் கட்டாயத்தால் கிடைத்த, இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.இவ்வாறு, கமல் கூறிஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X