பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனாவை வெல்வோம்' வீட்டிலேயே ஓவிய போட்டி

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று நடக்க உள்ள சுய ஊரடங்கில், நாள் முழுக்க, வீட்டிலேயே குழந்தைகளை குதுாகலமாக இருக்க வைக்க, சினிமா இயக்குனர் வசந்தபாலன், ஓவியப் போட்டி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:தனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால், அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கும். எவ்வளவு நேரம் தான் படிக்க வைப்பது... இன்று, நாமே வீட்டில் அடங்கி, மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள்; வரலாற்று தருணம். அன்றைய தினம், புத்தகம் வாசித்தல், 'டிவி' பார்த்தல், 'மொபைல் கேம்' போன்ற வழக்கமான விஷயங்களை தவிர, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஒரு ஓவியப் போட்டி அறிவிக்கலாம் என, தோன்றியது.வீட்டில் இருந்தபடியே, ஒரு வெள்ளைத் தாளில், 'கொரோனாவை வெல்வோம்' என்ற தலைப்பில், ஓவியம் வரைந்து, அதை, மொபைல் போனில் படம் எடுத்து, vasantabalan@gmail.com என்ற, மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இன்று காலை, 10:00 முதல், நாளை காலை, 10:00 மணி வரை வரும், 'இ - மெயில்'கள் மட்டுமே, போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். ஓவியங்களை அனுப்புபவர்கள், குழந்தைகளின் படம், வகுப்பு, பள்ளி விபரம் போன்றவற்றை இணைத்து அனுப்பவும்.பெற்றோர் வரைந்து தருவதை தவிர்க்க வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு, மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்களை வேண்டு மானாலும் அனுப்பலாம்.இவ்வாறு, வசந்தபாலன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X