பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கூட்டத்தில் மாற்றம்: இம்மாதத்திற்குள் முடிக்க திட்டம்

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சட்டசபை கூட்டம்,மானிய கோரிக்கை, சபாநாயகர், இம்மாதத்திற்குள் ,முடிக்க, திட்டம்

சென்னை:'கொரோனா' பீதியை தொடர்ந்து, அடுத்த மாதம், 9ம் தேதி வரை நடக்கவிருந்த, சட்டசபை கூட்டம், இம்மாதம், 31ம் தேதியுடன், நிறைவடையும் வகையில், நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டுள்ளது.
துறை ரீதியான மானிய கோரிக்கை மீது, விவாதம் நடத்தி, துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு, ஒப்புதல்அளிப்பதற்காக, சட்டசபை கூட்டம், இம்மாதம், 9ம் தேதி துவங்கியது. தினமும், இரண்டு அல்லது மூன்று துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமலிருக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் என, அனைத்தும், வரும், 31ம் தேதி வரை மூடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சட்டசபை கூட்டத் தொடரையும் ஒத்திவைக்கும்படி, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், 'சட்டசபை கூட்டம் நடந்தால் தான், மக்களிடம் அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தெரிவிக்க முடியும்' என, முதல்வர் கூறினார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, சட்டசபையை ஒத்தி வைக்க வலியுறுத்தின.அதன் தொடர்ச்சியாக, நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர், பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின், துணைத் தலைவர், துரைமுருகன், மூத்தஅமைச்சர்கள், சட்டசபை காங்., தலைவர் ராமசாமி, முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, சட்டசபையில், சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, சட்டசபை கூட்டம், இம்மாதம், 31ம் தேதியுடன் முடிக்கப்பட உள்ளது. வரும், 24ம் தேதியில் இருந்து, தினமும் காலை மற்றும் மாலை, சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.


புதிய நிகழ்ச்சி நிரல்



*சட்டசபை காலை, 10:00 மணிக்கும், மாலையில், 5:00 மணிக்கும் கூடும். மார்ச், 31 தவிர, மற்ற நாட்கள், கேள்வி நேரம் உண்டு.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
22-மார்-202013:58:38 IST Report Abuse
Aarkay உடனே நிறுத்தப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
BALU - HOSUR,இந்தியா
22-மார்-202012:14:29 IST Report Abuse
BALU ஆமாம், இவுங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.யாரும் இல்லாத கடையில டீ ஆத்திக்கிட்டு, மற்ற நேரமெல்லாம் வெளிநடப்பு செய்தே வீணடித்த கூட்டம் நாட்டில் அவசரநிலை பிரகடனப் படுத்தியிருக்கும் போது அதைப் பார்க்காம, கொரானாவால் எவ்வளவு சீரீயஸான நிலைக்கு நம்நாடு போய்க் கொண்டிருக்கிறது, அதை மட்டும் இப்போது பாருங்கள் முதல்வர் அவர்களே ஆயினும் நம் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் கொரோனா பற்றிய செயல்பாடுகள் நிச்சயம் பாராட்டுக் குரியவை.தலைக்கு மேல் பிரச்சினை ஐயா, கூட்டம் போடாதீங்க முதல்வரின் ஆரோக்கியமும் நமக்கு முக்கியமில்லையா?? வீடியோ கான்பரன்ஸிங்கிலேயே பெரும்பாண்மை வேலைகளை நீங்கள் செய்யலாம். இன்று 22/3/20 மட்டுமல்ல மார்ச் 31 வரையுமே யாரும் வெளியே வராமல் இருப்பதே நண்மை.மிகப் பெரிய பிரச்சினைகளையும் சவால்களையும் உயிரிழப்புகளையும் நாம் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் கட்டத்தில் உள்ளோம். சிறப்பாக யோசித்து கொரோனாவிலிருந்து மக்களை காப்போம்.மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X