பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க தனி அதிகாரி: மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தகவல்

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
RTI,  தகவல் உரிமை சட்டம், மாநில, தகவல்_ஆணையர்,  விழிப்புணர்வு,  ஊரகவளர்ச்சி_துறை, மனு

தகவல் உரிமை சட்டத்தில் பொதுமக்களுக்கு பதில் தருவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, துறை வாரியாக தனி அதிகாரியை நியமிக்கும் திட்டம் உள்ளதாக, மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்தார்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு மற்றும் மனுக்கள் மீதான விசாரணை முகாம் நேற்று நடந்தது.தமிழக தகவல் ஆணையர் பிரதாப்குமார், மனுதாரர்களிடம், அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் மாலை வரை நடந்த முகாமில், 50 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தகவல் ஆணையர் கூறியதாவது:தகவல் உரிமை சட்டத்தில், பொதுமக்கள் கேட்கும் தகவல்கள் கிடைக்காத பட்சத்தில், மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் முறையிடலாம். அங்கும் பதில்கிடைக்கவில்லை என்றால், சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீடு மனுக்கள் விசாரணைக்கு, பொதுமக்கள் சென்னைக்கு வரும் சிரமத்தை குறைக்க, மாவட்டம் தோறும் நாங்களே நேரடியாக சென்று விசாரணை நடத்தி தீர்வு கண்டு வருகிறோம்.

தகவல் உரிமை சட்டம் துவக்கப்பட்ட, 2005ம் ஆண்டு முதல் இதுவரை, 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில், இச்சட்டம் குறித்துபொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது.தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில், அதிகமானோர் இச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.பிற மாவட்டங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை.

தமிழகத்தில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் தொடர்பாக, மனுக்கள் அதிகம் வருகின்றன.அரசு துறைகளில் பிற பணிகளை கவனிக்கும் அதிகாரிகளே, தகவல் உரிமை சட்டத்திற்கு பதில் தர வேண்டி இருப்பதால், பொதுமக்களின் மனுக்களுக்கு பதில் தர, காலதாமதம் ஏற்படுகிறது.இதைத் தவிர்க்க, துறை வாரியாக தகவல் தரும் அதிகாரியை தனியாக நியமிக்க, அகில இந்திய தகவல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தனி அதிகாரி நியமிக்கப்பட்டால் காலதாமதம் தவிர்க்கப்படும்.அரசு துறைகளில் பொதுமக்கள் விண்ணப்பித்த மனுக்கள் மீது, 30 நாட்களில் தகவல் உரிமை சட்டத்தில் பதில் தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-மார்-202014:51:16 IST Report Abuse
Lion Drsekar First let them treat their staff in a nice manner, see the photo? One madam is standing before him? First he should be advised to provide seats and respect to their staffs. Vandhe madaram
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
22-மார்-202012:39:30 IST Report Abuse
a natanasabapathy இது என்ன நீதிமன்றம் நின்று கொண்டு தான் பதில் அளிக்க வேண்டுமா உட்கார்ந்து கொண்டு பதில் அளித்தால் என்னவாம்
Rate this:
Cancel
M.Gnanamani - Thanjavur,இந்தியா
22-மார்-202011:35:10 IST Report Abuse
M.Gnanamani அதிகாரிகளுடன் போதுமான சார்நிலை பணியாளர்களை நியமித்தால் மட்டுமே தகவல்களை விரைந்து வழங்க இயலும். கோப்புகளை தேடுதல் மற்றும் நகல் எடுத்தல், தகவல் வழங்குவதற்கான கடிதம் தயாரித்தல் ஆகிய அனைத்து பணிகளையும் செய்வது குமாஸ்தா நிலை பணியாளராகளே. எனவே முடிவெடுக்கும் அதிகாரியை மட்டும் கூடுதலாக நியமனம் செய்வதில் பயனில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X