அரசியல் செய்தி

தமிழ்நாடு

'2 பிள்ளை பெத்த பிறகு தான் திருமண உதவி தொகை கிடைக்குது'

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:''திருமண உதவித் தொகை, இரண்டு குழந்தை பெற்ற பிறகு தான் கிடைக்கிறது,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., கீதா ஜீவன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - கீதா ஜீவன்: மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில், பெண் குழந்தைகளை, கள்ளிப்பால் ஊற்றி கொன்றது, இந்த அரசுக்கு ஏற்பட்டு உள்ள கரும்புள்ளி.அமைச்சர், சரோஜா: இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதில், அரசு உறுதியாக உள்ளது.கீதாஜீவன்: இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலர்கள், அப்பணியை சரியாக செய்யவில்லை. விழிப்புணர்வு பிரசாரத்திற்காக, 2016 - 17ம் ஆண்டில், 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, 8 லட்சம் ரூபாய் தான் செலவிடப்பட்டுள்ளது. சிசு கொலையை தடுக்க, முறையாக பெண்களிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.பெண்கள் பாதுகாப்பிற்காக, 13 அம்ச திட்டங்களை, ஜெயலலிதா அறிவித்தார். அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதா; பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல், தமிழகத்தில் நிலவுகிறது.அமைச்சர், சரோஜா: தமிழகத்தில், பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், பாதுகாப்பான சூழல் உள்ளது.கீதாஜீவன்: திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளாக நிதியுதவி வழங்கப்படவில்லை. இரண்டாவது குழந்தை பெற்ற பிறகு தான், நிதியுதவி வந்து சேருகிறது; ஏன் இந்த தாமதம்?அமைச்சர், சரோஜா: திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 12.50 லட்சம் பெண்களுக்கு, 1,791 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6,100 கிலோ தங்கம்;4,371 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில், தமிழகம் முதலிடம் வகிப்பதற்கு, இந்த திட்டமும் அடித்தளம்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-மார்-202008:41:20 IST Report Abuse
ஆரூர் ரங் நன்கு விசாரித்துக் கொடுப்பது நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X