அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிசைகள் இல்லா தமிழகம் துணை முதல்வர் உறுதி

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 குடிசைகள் இல்லா தமிழகம் துணை முதல்வர் உறுதி

சென்னை:''குடிசைகள் இல்லாததமிழகத்தை உருவாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - சேகர்பாபு: சென்னை, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட, பி.ஆர்.ஆன்.கார்டன் திட்டப் பகுதி, ரேவ் பகுதி, எல்லிஸ்புரம் நகர் பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை, பழுது பார்க்க வேண்டும். இவை அனைத்தும் பழமையான கட்டடங்கள் என்பதால், தொழில்நுட்ப குழு வாயிலாக, ஆய்வு நடத்த வேண்டும். கல்யாணபுரம் பகுதியில், வீடுகளை காலி செய்த மக்கள், வீடின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.துணை முதல்வர், பன்னீர்செல்வம்: உறுப்பினர் கூறிய, மூன்று குடியிருப்புகளிலும், பழுது பார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. எல்லீஸ்புரத்தில், 1974ல் கட்டப்பட்ட, 39 குடியிருப்புகள், பழமையான கட்டடம் என்பதால், தொழில்நுட்ப வல்லுனர் குழு ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் கோரிக்கைப்படி, அனைத்து கட்டடங்களும், ஆய்வு செய்யப்படும்.கல்யாணபுரம் பகுதியில் உள்ளவர்களுக்கு, வீடு வழங்கப்படும். குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
22-மார்-202023:22:17 IST Report Abuse
m.viswanathan 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து விட்டு , ஆட்சியை தக்க வைத்து கொள்வதில் குறியாய் இருந்து விட்டு , பதவி ஆசையில் காலத்தை கழித்து விட்டு , இப்போது என்ன ஞானோதயம்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மார்-202017:56:53 IST Report Abuse
Endrum Indian அப்போ ஒண்ணு பண்ணலாம்
Rate this:
Share this comment
Cancel
22-மார்-202016:00:13 IST Report Abuse
ஆப்பு இருக்குற குடிசையெல்லாம் பிச்சிப் போட்ட்டா குடிசை இல்லாம போயிடும். 15 வருஷமா குடிசைகளை ஒழிக்காதவய்ங்க இப்போ ஒழிக்கப் போறாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X