கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வன்கொடுமை வழக்கு தி.மு.க., - எம்.பி., மனு

Added : மார் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை:வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட வழக்கை, ரத்து செய்யக் கோரி, தி.மு.க., - எம்.பி., மனு தாக்கல் செய்துள்ளார்
.கடந்த மாதம், 15ம் தேதி, சென்னையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி பேசினார். 'ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த, ஏழு, எட்டு பேர் நீதிபதிகளாக இருந்தனர் என்றால், அது, திராவிட இயக்கம் போட்ட பிச்சை' என, பேசியிருந்தார்.ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்து, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர், கல்யாணசுந்தரம், போலீசில் புகார் அளித்தார். ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது வெறுப்புணர்வை துாண்டும் விதமாக, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இருப்பதாக கூறப்பட்டது.இதையடுத்து, பாரதிக்கு எதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சென்னை, தேனாம்பேட்டை போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதை, ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு:ஒரு மாதத்துக்கு பின், புகார் அளிக்கப்பட்டுள்ளது. என் பேச்சில் சில வரிகளை மட்டும் எடுத்து, புகார் அளிக்கப்பட்டுள்ளது.வார்த்தைகளின் பின் உள்ள அர்த்தத்தை மறைத்து, திசை திருப்பும் வகையில், பேச்சை சித்தரித்துள்ளனர். பேச்சு முழுவதையும், போலீசார் பரிசீலித்திருக்க வேண்டும்.முழுமையான பேச்சை பரிசீலித்து, ஆரம்ப முகாந்திரம் உள்ளதா என்பதை, பார்த்திருக்க வேண்டும். நீதிபதிகள் யாரையும் அவமரியாதை செய்யும் நோக்கில் பேசவில்லை.இவ்வழக்கை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரிக்க கோரி, நீதிபதி சதீஷ்குமார் முன், வழக்கறிஞர் நீலகண்டன் முறையிட்டார். வரும், 24ல் விசாரிப்பதாக, நீதிபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-மார்-202020:37:45 IST Report Abuse
ஆரூர் ரங் விட்டிருந்தா இவனுங்களைத் தவிர எல்லோரையும் பிச்சைக்கார்களாக்கியிருப்பர் புரிந்து போய்தானே ஒன்பது வருஷமா உள்ளேயே விடலை , மவனே அடுத்த வருடம் ஒட்டுக்கேட்டு வா அப்போ பார்ப்போம் . நல்லா பிஞ்சதா ஒண்ணை ரெடி பண்ணிவெச்சிருக்கேன்
Rate this:
Cancel
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
22-மார்-202017:14:32 IST Report Abuse
Giridharan Srinivasan எந்த நீதிபதியும் இந்த ஆர்.எஸ்.பாரதி மீது உள்ள இந்த வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய மாட்டார். இந்த ஆர்.எஸ்.பாரதிக்கு வக்காலத்து வாங்கும் வழக்கறிஞர்(?) நீலகண்டனையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
22-மார்-202008:02:59 IST Report Abuse
natarajan s அவர் சொன்னதில் என்ன தவறு, இந்த திராவிடம் வந்த பிறகுதான் தமிழர்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள் ஆனார்கள், எல்லா இலவசங்களும் இவர்களால் வந்ததே அதனால் நீதிபதி பதவியும் அவர்கள் போட்ட பிச்சைதான்.இங்குதான் திறமைக்கு மதிப்பு கிடையாதே , இவர்கள் வந்த பிறகுதான் மபொசிக்கு மதிப்பு கூடியது ( மதிப்பெண் , பொருள் , சிபாரிசு - ம பொ சி ) அதுதான் TNPSC தேர்வு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X