10ம் வகுப்பு தேர்வு ஏப்ரலுக்கு தள்ளிவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வு ஏப்ரலுக்கு தள்ளிவைப்பு

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Corona, 10th Exam, 10ம் வகுப்பு, தேர்வு, ஒத்திவைப்பு, இபிஎஸ், முதல்வர்,அறிவிப்பு

சென்னை:''கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.
சட்டசபையில், நேற்று முதல்வர், இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்பு:கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும், 27ம் தேதி முதல், ஏப்ரல், 13ம் தேதி வரை நடப்பதாக இருந்த, பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. இந்த தேர்வுகள், தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பின், 15ம் தேதி மீண்டும் துவங்கும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், தற்போது நடந்து வருகின்றன. பிளஸ் 1 வகுப்புக்கு, நாளை மற்றும் 26ம் தேதி நடக்க உள்ள தேர்வுகளும்; பிளஸ் 2க்கு, 24ம் தேதி நடக்க உள்ள தேர்வும் திட்டமிட்டப்படி நடக்கும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X