அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தொகுதி பாகுபாடு பார்ப்பது இல்லை'

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:''நாங்கள் எவ்வளவோ திட்டங்களை அறிவிக்கிறோம். இதில், தொகுதி பாகுபாடு பார்ப்பது கிடையாது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., கூறினார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - நந்தகுமார்: தி.மு.க., ஆட்சியில், அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. பல சமத்துவபுரங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல், மக்கள் தவித்து வருகின்றனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில், சமத்துவபுரங்கள் உள்ளதால், அரசு புறக்கணிக்கிறதா என்ற, சந்தேகம் உள்ளது. முதல்வர்: சமத்துவபுரம் கட்டியபோதே, அங்கு என்னென்ன அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, திட்டமிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு திட்டமிட்டு கட்டியிருந்தால், எந்த பிரச்னையும் இருக்காது. நாங்கள், எவ்வளவோ திட்டங்களை அறிவிக்கிறோம். அதில், தொகுதி பாகுபாடு பார்ப்பது கிடையாது. கன்னியாகுமரி மாவட்டத்தில், எங்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் கிடையாது. இருப்பினும், அந்த மாவட்ட மக்களுக்காக பல திட்டங்களை அறிவித்துள்ளோம். மக்கள் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். யாரையும் உதாசீனப்படுத்துவது கிடையாது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X