பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பாதிப்பு சிறு வணிக கடன்கள் ரத்தாகுமா?

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொரோனா வைரஸ் அபாயத்தால், பெட்டிக்கடை உள்ளிட்ட தொழில்கள் முடங்கியுள்ளதால், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய, சிறு வணிக கடன்களை ரத்து செய்யுமாறு, தமிழக அரசுக்கு, சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் சார்பில், சிறு வணிகர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. நடப்பு, 2019 - - 20ம் நிதியாண்டில், பிப்ரவரி வரை, 1.48 லட்சம் பேருக்கு, 335 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த பிரிவில், கடன் வாங்கும் சிறு வணிகர்கள், தங்களுக்குள், ஒருவருக்கு ஒருவர் பிணையதாரராகவும், கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பையும் ஏற்கின்றனர். தற்போது, இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
அந்த வைரஸ், தமிழகத்தில் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசு, வரும், 31ம் தேதி வரை, மக்கள் அதிகம் கூடும், வணிக வளாகங்கள், சுற்றுலா விடுதிகளை மூட, உத்தரவிட்டுள்ளது.இதனால், சுற்றுலா விடுதிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்களை ஒட்டிய, பெட்டிக்கடை, டீ கடை, டிபன் கடை, பழக்கடைகளில், வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால், சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்கள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய, சிறு வணிக கடன்களை ரத்து செய்யுமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். - நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
22-மார்-202009:41:02 IST Report Abuse
Ramachandran Rajagopal தனியாரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்தவர்களுக்கு கடன் குறைந்த வட்டியில் கொடுப்பதை தள்ளுபடி செய்து விடவேண்டும் என்பது பேராசையின் விளைவு.தவணை காலத்தை தள்ளிவைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X