பொது செய்தி

இந்தியா

உலக பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாகும் 1982, 2009ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலை உருவாகலாம் என கணிப்பு

Updated : மார் 23, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
 உலக ,பொருளாதார_வளர்ச்சி, மந்தநிலை, பூஜ்ஜியமாகும் , ரிசர்வ் வங்கி, கணிப்பு, அடிப்படைப் புள்ளி

புதுடில்லி:உலகளவிலும், இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், உலக வளர்ச்சி மந்தநிலைக்குள் செல்லும் என்றும் ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவும் மந்தநிலையை சந்திக்கும் என்கின்றன.

தர நிர்ணய நிறுவனமான, 'பிட்ச் ரேட்டிங்ஸ்' நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு
நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும் என குறைத்து அறிவித்துள்ளது.முதலீடு மற்றும்
ஏற்றுமதிகளில், கொரோனாவின் தாக்கத்தால் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்றும், இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி, 5.1 சதவீதமாக குறைந்து இருக்கும்என்றும் தெரிவித்துள்ளது.அத்துடன், உலக பொருளாதார வளர்ச்சியும் சரிவைக் காணும் என்றும், அது இப்போது மந்தநிலைக்குள் சென்றுவிட்டது என்றும் தெரிவித்து உள்ளது.


பாதிப்பு அதிகரிக்கும்பிட்ச் நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. மேலும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.இது குறித்து, பிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, அடுத்து வரும் வாரங்களில் அதிகரிக்கும்வாய்ப்புகள் இருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, முதலீடு மற்றும் ஏற்றுமதிகளில் பாதிப்பு அதிகரிக்கும். மேலும்,
வினியோக தொடர்பில் பாதிப்புகள் ஏற்படும். இதனால், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி குறித்த கணிப்பை, 5.1 சதவீதமாக குறைத்துள்ளோம். அடுத்து வரும் நிதியாண்டில், வளர்ச்சியை,
5.0 சதவீதமாக குறைத்து கணித்துள்ளோம்.உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ம் ஆண்டில், 2.5 சதவீதமாக இருக்கும் என்று கடந்த டிசம்பரில் கணித்திருந்த நிலையில்,
தற்போது அதை, 1.3 சதவீதமாக குறைத்துள்ளோம்.

உலக பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து விழுந்து வரும் நிலையில், அது தற்போது மந்தநிலையினுள் சென்றுவிட்டது.


ரிசர்வ் வங்கி

இந்தியாவை பொறுத்தவரை, அதன் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொழில் துறைகள், சீனாவை நம்பியே இருக்கின்றன. இதுவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.மேலும், யெஸ் பேங்க் தோல்வியால், நிதியமைப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய அம்சமாகஇருக்கிறது.வளர்ச்சி கீழ்நோக்கி செல்லும் நிலையில், ரிசர்வ் வங்கி, கூடுதலாக வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு பிட்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 'பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்' நிறுவனம், கடந்த மூன்று நாட்களில், மூன்று முறை, பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை மாற்றி தெரிவித்துள்ளது.கடந்த புதன் கிழமையன்று, நடப்பு ஆண்டில், உலக பொருளாதார வளர்ச்சி, 2.2 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், வியாழனன்று, 40 அடிப்படைப் புள்ளிகளை குறைத்து,
1.80 சதவீதமாகஅறிவித்தது.இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று, உலக பொருளாதாரம்
மந்தநிலைக்கு சென்றுவிட்டதாகவும், வளர்ச்சி, பூஜ்ஜியமாக இருக்கும் என்றும்
தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த, 1982, 2009ம் ஆண்டுகளில் ஏற்பட்டதை போன்ற மந்தநிலை ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது என்றும், அமெரிக்க பொருளாதாரமும் மந்தநிலையின் பிடிக்குள் விழும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202021:10:11 IST Report Abuse
நக்கல் இந்த நாட்டை நேசிக்காதவன் எல்லோரையும் கொரோனா தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லாவே, ஏசுவே...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மார்-202017:12:34 IST Report Abuse
Endrum Indian என்னக்கு இதில் புரியாத புதிர் என்னவென்றால் நஷ்டம் இல்லவே இல்லை. என்னிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கின்றது. அவனிடம் இருக்கும் பொருள் அவனிடம் இருக்கின்றது. இன்று விற்கமுடியவில்லை. இதுவே இந்த தாக்கம் முடிந்தவுடன் இரண்டு மடங்கு அல்லது பல மடங்கு எல்லோரும் வாங்குவார்கள். என்ன பணம் வரவு அதனால் லாபம் இப்போது இல்லை. ஆனால் இந்த மார்ச்சில் வியாபாரம் இல்லை அவ்வளவு தானே???ஏப்ரல் இல்லை மே இல்லை ஜுனிலிருந்து வியாபாரம் பிறகு இன்னும் மேலே மேலே போகும் அவ்வளவு தானே???இதுக்கு இவ்வளவு டப்பாவா???
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
22-மார்-202017:33:30 IST Report Abuse
Rajasஇது பெரிய கணக்கு. சரி முதலில் Expiry தேதி எந்த பொருட்களுக்கு எத்தனை காலம். காய்கறி, பால், உணவு பொருட்களின் ஆயுள் காலம் சில நாட்கள் மட்டுமே. மற்ற 75 % பொருட்களின் ஆயுள் காலம் ஒரு வருடத்திற்கு குறைவானதே. அப்படி பார்த்தால் போன ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் ஆயுள் காலம் டிசம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையே. உற்பத்தி பொருட்களின் விலை, சம்பளம், GST போன்ற வரிகள் கடந்த ஆண்டை விட மிக அதிகம். பொருளாதார மந்ததால் விற்பனை குறைந்ததால் கையில் இருக்கும் பொருட்களை எல்லாம் விழாக்காலங்களில் தள்ளுபடி விற்பனையில் விற்று விட்டார்கள். இல்லையெனில் நஷ்டமாகி விடும். மிச்சமிருக்கும் பொருட்களை மார்ச் மாதத்தில் எப்படியாவது விற்றால் தான் இந்த வருட கணக்கில் நஷ்டமா அல்லது லாபமா என்று தெரியும். Inventory வருட முடிவில் அதிகம் வைக்க முடியாது....
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
22-மார்-202015:05:26 IST Report Abuse
Vijay D Ratnam எல்லாத்துக்கும் மோடிதான் பதில் சொல்லனுமா அல்லது மோடிதான் காரணமா ?
Rate this:
Share this comment
22-மார்-202015:39:48 IST Report Abuse
ஆப்புமோடியைத் தவிர வேற யாருமே இருக்கறதா தெரியலை. அவரே பீதி வேணாங்கறாரு. அவரே ரயில நிறுத்துறாரு. அவரே சுய ஊரடங்கு உத்தரவு. அவரே ட்விட்டர்ல. அவரே சார்க் மாநாட்டுல. அவுரே டி.வீ ல. அவ்வளவு விளம்பரப் பிரியமா? இல்லே மத்த ஆளுங்களெல்லாம் ஒண்ணும் பேச மாட்டாங்களா? There is a serious leadership vacuum....
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
22-மார்-202017:08:44 IST Report Abuse
Rajasஎல்லாவற்றையும் பேசும் பிரதமர் ஏன் இதுவரை பொருளாதார பிரச்சினை குறித்து பேசவில்லை. அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிட்ட காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்ற பிரதமர் இதுவரை நிதி துறை, சுகாதார துறை, பெட்ரோலிய துறை, போக்குவரத்து துறைகளில் என்ன முன்னேற்றத்தை கண்டார்...
Rate this:
Share this comment
Mahesh - chennai,இந்தியா
22-மார்-202017:38:02 IST Report Abuse
Maheshதனக்கு தெரியாத விஷயத்தில் கருத்து தெரிவிக்காமல் இருப்பது அவரின் அறிவு முதிர்ச்சியை காட்டுகிறது. அதை ஏன் குறை சொல்லுகிறீர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X