சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொரீஷியஸ் நாட்டில் தமிழக மாணவர்கள் தவிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:மொரீஷியஸ் நாட்டில், மருத்துவம் படிக்க சென்ற, 1,000க்கும் மேற்பட்ட, இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, அந்த மாணவர்கள் வெளியிட்டுள்ள, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மொரீஷியஸ் நாட்டில், எஸ்.எஸ்.ஆர்., மருத்துவ கல்லுாரி உள்ளது. அந்த கல்லுாரியில், தமிழகத்தை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கட்டுப்பாடுகள்
அதேபோல், அங்குள்ள, அண்ணா மருத்துவ கல்லுாரியிலும், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், ஏராளமானோர் படிக்கின்றனர். இரண்டு மருத்துவ கல்லுாரியிலும், 1,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர்.தற்போது, 'கொரோனா' வைரஸ், மொரீஷியஸ் நாட்டிலும் பரவ துவங்கியுள்ளது. இதனால், அந்நாடு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது; பல விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.குளிர் பிரதேச நாடுகளில், கொரோனா வைரஸ், அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
குளிர் பிரதேசம் மட்டுமின்றி, சிறிய நாடான மொரீஷியசில், கொரோனா வைரஸ் பாதிப்பு, மிக பெரிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், அங்கு மருத்துவம் படிக்கும், தமிழக மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.ஒரு சில விமானங்கள் இயக்கப்பட்டாலும், அதற்கு கட்டணம், 1.50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
பாதுகாப்பு
இது குறித்து, மொரீஷியஸ் நாட்டில் பரிதவிக்கும், இந்திய மாணவர்கள் சிலர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள, வீடியோவில் பேசியதாவது:மொரீஷியஸ் நாட்டை பொறுத்தவரையில், போதிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லை. இந்நாட்டில், கொரோனா வைரஸ் பரவ துவங்கி னால், உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகளை, தென் ஆப்பிரிக்காவில் தான் செய்ய முடியும். மேலும், முகக்கவசம் போன்ற பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களும் கிடைப்பதில்லை. நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் எங்களை, இந்திய அரசு தான் மீட்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X