பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை கடற்கரைகள் மூடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:'கொரோனா வைரஸ்' பரவும் அபாயம் உள்ளதால், சென்னையில் உள்ள, மெரினா, எலியட்ஸ்உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளும் மூடப்படுவதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி அறிவிப்பு:தமிழக அரசின் உத்தர வுப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல, வணிக வளாகங்கள், திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் கடைகள், வரும், 31ம் தேதி வரை மூடப்பட்டன.சென்னையில் உள்ள, மெரினா, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை பகுதி கள், நாள்தோறும், உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களாக உள்ளன.
எனவே, கடற்கரை பகுதிக்கு வரும் மக்களின் நலன் கருதி, கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில், மெரினா, திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகள், மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகின்றன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, கடற்கரை பகுதியில் இருந்தவர்களை, ஒலிபெருக்கி வாயிலாக அப்புறப்படுத்தும் பணிகளில், போலீசார், நேற்று ஈடுபட்டனர். மேலும், கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லாதவாறு, போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X