அரசியல் செய்தி

தமிழ்நாடு

பூந்தமல்லி - லைட் ஹவுஸ் மெட்ரோ ரயில் எப்போது?

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:''சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கலங்கரை விளக்கத்தில் இருந்து, பூந்தமல்லி புறவழிச்சாலை வரை, நான்காம் கட்டமாக துவக்கப்படும்,'' என, தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
சட்டசபையில், தி.மு.க., - கிருஷ்ணசாமி,''பூந்தமல்லியில் இருந்து, சென்னை கலங்கரை விளக்கம் வரை, மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,'' என, வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்து, அமைச்சர், எம்.சி. சம்பத் கூறியதாவது:சென்னை மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் ஒன்று, வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரை, 23.1 கி.மீ., துாரம்; வழித்தடம் இரண்டில், சென்ட்ரலில் இருந்து, புனித தோமையார் மலை வரை, 22 கி.மீ., துாரம் பணிகள் முடிக்கப்பட்டு, பயணியர் சேவை துவக்கப்பட்டுள்ளது.வண்ணாரப்பேட்டை முதல், திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, பணிகள் நடந்து வருகின்றன. மூன்றாம் கட்டமாக, மாதவரம் - சோழிங்கநல்லுார்; மாதவரம் - சென்னை புறநகர் பஸ் நிலையம் வரை, பணிகள் மேற்கொள்ள, ஜப்பான் நிறுவனம் நிதியுதவி வழங்கி உள்ளது. பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே, நான்காம் கட்டமாக, பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X