பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு மாத சம்பளம் அரசுக்கு வழங்கிய நீதிபதி

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ஒரு மாத சம்பளத்தை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தற்காலிகமாக வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.அவர்களுக்கு உதவும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம், தன் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளார். தமிழக அரசின் தலைமை செயலரை, நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து, ௨.௨௫ லட்சம் ரூபாய்க்கான காசோலையை,நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழங்கினார்.
காஞ்சி சங்கரமடம் ரூ.10 லட்சம் உதவி
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, காஞ்சி சங்கரமடம் சார்பில், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை, சிறப்பாக மேற்கொண்டு வரும் முதல்வரை பாராட்டி, பொது நலன் கருதி, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கினார். இதற்கான காசோலையை, சங்கரமடம்நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வரிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X