பொது செய்தி

தமிழ்நாடு

உதாசீனப்படுத்தாதீர்: ரஜினி

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை:'பிரதமர் மோடி அறிவித்த, சுய ஊரடங்கை உதாசீனப்படுத்த வேண்டாம்' என, நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, ரஜினி வெளியிட்டுள்ள, வீடியோ பதிவு:'கொரோனா' பாதித்த நாடுகளில், இந்தியா தற்போது, இரண்டாவது கட்டத்தில் உள்ளது. அது, மூன்றாவது கட்டத்திற்கு போய் விடக் கூடாது. மக்கள் வெளியே நடமாடும்போது பரவும், அந்த வைரஸ், 12 - 14 மணி நேரத்தில் பரவாமல் இருந்தாலே, மூன்றாவது கட்டத்திற்கு செல்வதை தடுத்து விடலாம்.அதற்காக, பிரதமர் மோடி, ஒரு சுய ஊரடங்கு உத்தரவு போட்டுஉள்ளார். இதே மாதிரி, இத்தாலியில், இரண்டாவது கட்டத்தில் இருந்தபோது, அந்நாட்டு அரசு, மக்களை எச்சரித்தது.ஆனால், அந்நாட்டு மக்கள், அதை உதாசீனப்படுத்தினர்.
இதனால், அங்கு பல ஆயிரம் உயிர்கள் பலியாயின.அதே மாதிரி ஒரு நிலை, நம் இந்தியாவுக்கும் வரக் கூடாது. அதனால், நாம் அனைவரும், அந்த ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மருத்துவர்கள் பணியாளர்கள் பலரும், உயிரையும் பணயம் வைத்து, வேலை பார்க்கினறனர். அவர்களுக்காக, பிரதமர் சொன்ன மாதிரி, 22ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, அவர்களை மனதார பாராட்டுவோம்.அவர்களும், குடும்பத்தினரும் நன்றாக இருக்க, ஆண்டவனை பிரார்த்திப்போம்.இவ்வாறு, ரஜினி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X