பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தேவை அதிகரிப்பு: உள்ளாட்சிகள் திணறல்

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 தண்ணீர்,நிலத்தடி நீர்மட்டம் , வினியோகம், தேவை, அதிகரிப்பு,உள்ளாட்சிகள், திணறல்

அவிநாசி: தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதை பூர்த்தி செய்ய முடியாமல், உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறுகின்றன.

'கொரோனா' வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தினசரி, 10 முதல், 15 தடவை கைகளை, நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். வழக்கமான நாட்களை விட, அதிகளவு நீரை செலவழிக்க வேண்டிய நிலை, மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.ஏற்கனவே, பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

உதாரணமாக, மேட்டுப்பாளையம், பவானி குடிநீர் திட்டத்தை சார்ந்துள்ள, அன்னூர், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், பொது மக்களுக்கான குடிநீர், 10 -- 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, வினியோகிக்கப்படுகிறது.இதுபோன்ற சூழலில், பொதுமக்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம், உள்ளாட்சி அமைப்பினருக்கு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்பினர் கூறுகையில், ''தற்போது, தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வடிகால் வாரியத்தினர், தண்ணீரை தடையின்றி, நிர்ணயிக்கப்பட்ட அளவு வழங்க வேண்டும். தற்போது, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உள்ளாட்சி நிர்வாகங்களின் 'போர்வெல்' தண்ணீர் வினியோக அளவை அதிகரித்துள்ளோம். இதனால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறையும். இதனால், கோடையில் ஏற்படும் வறட்சியை சமாளிப்பது, பெரும் சவாலான பணியாக இருக்கும்'' என்றனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீரேற்று நிலையங்களில், மின் வினியோகம் துண்டிப்பு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் குழாய் உடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படாத பட்சத்தில், வழக்கமாக வினியோகிக்கப்படும், தண்ணீரை வினியோகிப்பதில் பிரச்னை இருக்காது. அதே நேரம் கூடுதலாக தண்ணீர் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-மார்-202009:18:37 IST Report Abuse
ஆரூர் ரங் மேற்கு மாவட்டங்களில் இந்தாண்டு பருவமழை கூடுதலாகப் பெய்திருந்தும் 10 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் அதுவும் போர்வெல் என்பது கொடுமை . இன்னும் மக்கள் இலவசங்களுக்காக ஓட்டுபோடுவதன் பலன்
Rate this:
Share this comment
Cancel
22-மார்-202006:10:38 IST Report Abuse
ஆப்பு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கலாம் இந்த கொடூரோனா. எல்லாருக்கும் வீடு கிடைச்சிருக்கும். எல்லோருக்கும் வீட்டிலேயே குடிநீரும் கிடைச்சிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X