சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் வதந்தி திருவள்ளூரில் இருவர் கைது

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருவள்ளூர்: சமூக வலை தளங்களில், கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி பரப்பிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியில், கொரோனா வால் பாதிக்கப்பட்ட, 12 பேர் இறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின்படி, பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், காட்டுப்பாக்கம் சிவகுமார், 37, மற்றும் அவரது நண்பர் மாங்காடு பெஞ்சமின் 33, என, தெரிந்தது.இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புவோர் கைது செய்யப்படுவர் என, கலெக்டர் மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X