தமிழ்நாடு

தமிழக- - ஆந்திர எல்லைகள் மூடல்: ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

Added : மார் 21, 2020
Share
Advertisement
 தமிழக- - ஆந்திர எல்லைகள் மூடல்:  ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழக -- ஆந்திர எல்லைகள் மூடப்பட்டதால், அவ்வழியே வந்த, கனரக ஓட்டுனர்களுக்கு. அதிகாரிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, அரசு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, தமிழகத்தை ஒட்டி உள்ள ஆந்திர எல்லைகளை மூட அரசு முடிவெடுத்தது.அதை தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள், எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், எல்லையில், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால், போக்குவரத்து பாதித்தது. திருவள்ளூர்தமிழக -- ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகளில், சிலவற்றை தவிர, இதர வாகன போக்குவரத்திற்காக, வரும், 31 வரை தடை செய்யப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஆந்திர பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகளான, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி சாலைகளில், பால், பெட்ரோல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், காஸ் சிலிண்டர் லாரிகள்.இதர சரக்கு வாகனங்கள், இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணியரின் இலகுரக வாகனங்கள், அரசு பஸ்கள் மட்டும் இயங்கும். எனினும், இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

மற்ற வாகன போக்குவரத்துக்கு வரும், 31ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. ஊத்துக்கோட்டைஊத்துக்கோட்டையில் இருந்து, நாகலாபுரம், சத்தியவேடு ஆகிய இரண்டு சாலைகள், ஆந்திராவை இணைக்கின்றன.நேற்று காலை, சுகாதாரம், போலீஸ், வருவாய் அதிகாரிகள் இரண்டு சாலைகளையும், தடுப்புகள் போட்டு மூடினர். இதேபோல், பென்னலுார்பேட்டை பகுதியிலும், தடுப்புகள் போட்டு எல்லையை மூடினர். கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி பகுதியில், ஆந்திர எல்லையை இணைக்கும் சாலைகள் அமைந்துள்ள எளாவூர், ஆரம்பாக்கம், கண்ணம்பாக்கம், பொம்மாஜிகுளம் ஆகிய பகுதிகளில், சுகாதார துறை, வருவாய் துறை, போலீசார் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சரக்குடன் வரும் லாரிகள், கன்டெய்னர்கள், டேங்கர் லாரிகள், தமிழக பதிவு எண் உடைய கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டும், தமிழகத்திற்குள் நேற்று அனுமதிக்கப்பட்டன.எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், தமிழக அரசு சார்பில், அதிகாரிகள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.இதனால், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பித்தது.திருத்தணிதிருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடி, தமிழக- - ஆந்திர மாநில எல்லையாக அமைந்துள்ளது.'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், சுகாதார துறையினர், அங்கு, 24 மணி நேரமும் முகாமிட்டு, அவ்வழியாக, தமிழக எல்லைக்கு வரும் அனைத்து வாகனங்களையும், சுகாதார ஊழியர்கள் நிறுத்தி, கிருமி நாசி தெளிக்கப்பட்டது.வாகனங்களில் பயணம் செய்யும் நபர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என, பரிசோதனை செய்த பின்பே உள்ளே வர அனுமதிக்கின்றனர்.திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில், 50 சதவீதம் பஸ்கள் நேற்றே நிறுத்தப்பட்டன. மேலும், தனியார் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X