பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு பயணியர் மாமல்லபுரத்தில் தங்கல்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 வெளிநாட்டு பயணியர் மாமல்லபுரத்தில் தங்கல்

மாமல்லபுரம்: வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்தானதால், சுற்றுலாவுக்கு வந்த வெளிநாட்டு பயணியர், மாமல்லபுரத்தில் தங்கி, சிரமப்படுகின்றனர்.

ஆண்டுதோறும், ஆகஸ்ட் - ஏப்ரல் மாத காலங்களில், வெளிநாட்டு சுற்றுலா பயணியர், நம்நாட்டுக்கு சுற்றுலா வருவர்.அவ்வாறு, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த அவர்கள், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியால், தற்போது, சிக்கலில் உள்ளனர். வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்தால், சொந்த நாடு திரும்ப இயலாமல் சிரமப்படுகின்றனர்.இதனால், மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளில் தங்கி, தங்கள் நாட்டு விமானம் எப்போது வரும் என, காத்திருக்கின்றனர்.இது குறித்து, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணியர், தற்போதும் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், நாடு திரும்ப முடியாமல், சில விடுதிகளில் தங்கி, விமானத்திற்கு எதிர்பார்த்துள்ளனர். திட்டமிட்டப்படி திரும்பாததால், அவர்களுக்கு, செலவும் அதிகமாகிறது.பிரிட்டன் வழியே, சுற்று வழித்தடத்தில் செல்ல, திட்டமிட்டு வந்த பயணியருக்கு, அத்தட விமானமும் இயக்கப்படவில்லை. இதனால், வெளிநாட்டு பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X