பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை கிடைக்குமா?

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை: வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க, வீட்டு உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, சென்னையில், வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம். வீட்டில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டு வேலை பார்க்க, பெண்களை பணி அமர்த்துவது வாடிக்கை.இதேபோல், சென்னையில் மட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், பெண்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு வருமானம் குறைவாக உள்ளதால், ஒருவரே பல வீடுகளில் வேலை செய்யும் நிலை உள்ளது.இவர்கள் பணிபுரியும் வீடுகளில், யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அவை மற்ற வீடுகளுக்கு எளிதில் பரவும் வாய்ப்புள்ளது. இதனால், வீட்டு வேலை செய்யும் பெண்களும், மற்றவர்களும் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.இந்நிலையில், பல வீடுகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு, வீட்டு உரிமையாளர்கள், ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்துள்ளனர். ஆனால், பெரும்பாலான வீடுகளில் இவை பின்பற்றப்படவில்லை.சில வீடுகளில், கொரோனா பரவல் குறித்து தெரிவித்து, விடுமுறை கோரினால், வருமானம் பாதிக்கும் என, வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் அஞ்சுகின்றனர்.மனிதாபிமான அடிப்படையில், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு, 31ம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க, வீட்டு உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம், மாநில ஒருங்கிணைப்பாளர்,எம்.வளர்மதி கூறியதாவது:மக்கள் தங்களைதனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்கள், தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்பதால், தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது.அனைவரும் வீட்டில் இருப்பதால், வேலை செய்யும் பெண்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது.எனவே, வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு, வீட்டு உரிமையாளர்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X