ரூ.307 கோடி செலவில் 570 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.307 கோடி செலவில் 570 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி திட்டம்

Added : மார் 21, 2020
Share

சென்னை: கோயம்பேடை அடுத்த நெற்குன்றம் பகுதியில், 307 கோடி ரூபாய் செலவில், 570 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்த உள்ளது.

சென்னை கோயம்பேடை அடுத்த நெற்குன்றம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.இதே திட்டபகுதியில் பொது மக்களுக்கான குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய திட்ட பணிகளை வாரியம் துவக்கியுள்ளது.

இதன்படி, மத்திய வருவாய் பிரிவினருக்காக, 167 கோடி ரூபாயில், 342 வீடுகள் கட்டப்பட உள்ளன. மேலும், உயர் வருவாய் பிரிவினருக்காக, 140 கோடி ரூபாயில், 228 வீடுகள் கட்டப்பட உள்ளன.அடித்தளம், தரைதளத்துடன், 19 மாடி கட்டடமாக இக்குடியிருப்பு அமைய உள்ளது. இந்த இரு திட்டங்களும் சுய நிதி முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X