அன்றாட தேவைக்கே அல்லாடும் நிலைமை

Added : மார் 21, 2020
Share
Advertisement
 அன்றாட தேவைக்கே அல்லாடும் நிலைமை

எண்ணுார்: 'கொரோனா' பரவலால், மக்கள் நடமாட்டம் குறைந்ததையடுத்து, சிறுதொழில்கள், குடிசைத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

கொரோனா வைரசால், உலக அளவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும், வைரஸ் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை, 300ஐ நெருங்கியது. இவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதால், நோய் தொற்றின் வீரியத்தை குறைக்க முடியும். எனவே, தமிழக அரசு, தியேட்டர், வணிக வளாகங்கள், கோவில்கள், நுாலகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டது.பல தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால், மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.இதனால், சென்னையில் மக்கள் நடமாட்டம், வழக்கத்திற்கு மாறாக குறைந்துள்ளது.இதன் காரணமாக, சிறு அளவில் முதலீடு போட்டு விற்பனை செய்யும் தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், குடிசை தொழில் வியாபாரிகள், வியாபாரமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.ஒவ்வொரு முறை, அசாதாரண சூழல் ஏற்படும் போதும், சிறு வியாபாரிகள், வணிகர்கள், குடிசை தொழில் செய்வோருக்கு கடுமையான பாதிப்பு இருப்பதாக, தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.வாடிய முகம்!மக்கள் கூட்டம் குறைந்ததையடுத்து, கட்டிய பூக்கள் வாடியுள்ளன. இதனால், கடும் நஷ்டம் ஏற்படுகிறது. வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா வைரசின் பாதிப்பு தெரிகிறது. இருந்தும் தினத்தேவை என்றபோது, சிரமமாக தான் உள்ளது. 31ம் தேதி வரை, இப்படி தான் இருக்கும்னுசொல்றாங்க. எப்படி சமாளிப்பேன் என்றுதெரியவில்லை.என்.லட்சுமி, 68,பூ வியாபாரம், எர்ணாவூர்.சவாரி கிடையாது!தினமும், நான்கு முதல், ஐந்து சவாரிகள் கிடைத்த இடத்தில், ஒரு சவாரி கூட வராதது, மிகுந்த சிரமம். நான், சொந்த ஆட்டோ வைத்துள்ளேன். ஆனால், வாடகைக்கு ஆட்டோ ஓட்டுவோர் நிலைமை இன்னும் கவலைக்குரியது.

பொது போக்குவரத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால், அவசர தேவைக்கு, பலருக்கும் ஆட்டோவைநாடுவர். அதற்காகவே, ஆட்டோவுடன் நகர் வலம்வருகிறேன்.எஸ்.மனோகரன், 48,ஆட்டோ ஓட்டுனர், எர்ணாவூர்.முடங்கிய வியாபாரம்!ஆர்டர் கிடையாது. சில்லரையாக, தினமும் குறைந்தது, 5,000 ரூபாயாவது வியாபாரம் ஆகும்.

கொரோனா பரவலால், சுத்தமாக வியாபாரமே இல்லை. குடிசை தொழில்கள், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று குறைய, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டியது கடமை. அது, நமக்கான பாதுகாப்பு என்ற போது, அதன்படி நடப்பதே சரி.எல்.கபிலர், 33,உறைகிணறு செய்பவர், எர்ணாவூர்.சிறு, குறு தொழில்கள் சுணக்கம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X