ஹபீஸ் சயீதுக்கு 'ஆஞ்சியோபிளாஸ்டி' சோதனை

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

லாகூர்:தடை செய்யப்பட்ட, ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர், ஹபீஸ் சயீதுக்கு, பாக்., மருத்துவமனையில், 'ஆஞ்சியோபிளாஸ்டி' எனப்படும், இதய ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஹபீஸ் சயீத், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின்படி, 2019, ஜூலையில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்குப் பின், அவருக்கு, கடந்த மாதம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இதையடுத்து, லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சயீதுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர், இதயநோய் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, ஆஞ்சியோபிளாஸ்டி சோதனை நடைபெற்றது. இதையடுத்து, இதய பராமரிப்பு பிரிவிற்கு ஹபீஸ் சயீத் மாற்றப்பட்டார். இன்று, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என, தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
22-மார்-202008:04:27 IST Report Abuse
natarajan s இதெல்லாம் ஒரு செய்தி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X