சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 வயது சிறுமி கொடூர கொலை: காமுகனை தூக்கிலிட மக்கள் ஆவேசம்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மதுரவாயல்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, மாடியில் இருந்து துாக்கி வீசி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அப்பகுதியினர், அவனை துாக்கிலிட வேண்டும் என ஆவேசப்பட்டனர்.மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனி, நான்காவது பிளாக், ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர், சீனிவாசன். இவரது மகள் ஷாலு, 10. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.இவர்கள் தங்கி உள்ள, இரண்டு மாடி குடியிருப்பில், மாடிக்கு ஒரு பொது கழிப்பறை உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, கழிப்பறைக்கு தனியாக சென்ற சிறுமி, நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர் வெளியே தேடியும், சிறுமியை காணவில்லை.

இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், அப்பகுதி முழுவதும் தேடினர்.அப்போது, அதே குடியிருப்பின் பின்புறம், படுகாயங்களுடன் சிறுமி மயங்கி கிடப்பது தெரிய வந்தது. அவரை மீட்டு, அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமி இறந்தது தெரிய வந்தது.இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில், அதே குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வரும், திண்டிவனத்தை சேர்ந்த சுரேஷ், 29, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 'நிர்பயா' தீர்ப்பை போன்று, சுரேஷிற்கும் துாக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என, அப்பகுதியினர் ஆவேசப்பட்டனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:நள்ளிரவு கழிப்பறைக்கு சென்ற சிறுமியை, வலுக்கட்டாயமாக இரண்டாவது மாடிக்கு துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி சத்தம் போடவே, மேலாடையை கழட்டி, வாயில் அடைத்தார். இதில், சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

இதனால், பதற்றமடைந்த சுரேஷ், சிறுமியை மொட்டை மாடியில் இருந்து கீழே துாக்கி வீசியுள்ளார்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202012:08:46 IST Report Abuse
ருத்ரா விசாரணையே இல்லாமல் என்கவுண்டர் செய்ய வேண்டும். தூக்கு தண்டனை என்றால் வருடக்கணக்கில் இழுக்கும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மார்-202005:40:43 IST Report Abuse
Mani . V இந்தியாவில் நிதி ஸாரி நீதி சாகவில்லை. இவனுக்கு எப்படியும் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கு தண்டனை கிடைத்தே தீரும்.
Rate this:
Cancel
Thangavel Vel Batam, இந்தோனேஷியா இன்னைக்கு சுரேஷ் போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சிக்கணும்... இல்லன்னா அந்த circle போலீஸ் எல்லாம் 6666
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X