பொது செய்தி

தமிழ்நாடு

வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: நடவடிக்கை இல்லை என மக்கள் புகார்

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020
Share
Advertisement
 வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: நடவடிக்கை இல்லை என மக்கள் புகார்

எண்ணுார்: அனைத்து இடங்களிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில், எண்ணுார் அனல் மின் நிலைய வளாகத்திலும், ஊழியர்களுக்கும் எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று காலை நிறுவனம் சார்பில், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரி, நுாதன முறையில், சொந்த செலவில் கிருமி நாசினி வாங்கி வந்து, அனல் மின் நிலைய வாயிலில், கைகளை கழுவி காண்பித்தனர். இந்த சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.குடியிருப்புகளில் கட்டுப்பாடுவிருகம்பாக்கம்: விருகம்பாக்கம், சொர்ணாம்பிகை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு, அயர்லாந்தில் இருந்து வந்த இளைஞருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், வெளியாட்கள் யாரும் தேவையில்லாமல் வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. 'ஸ்விகி, உபேர் ஈட்ஸ்' போன்ற உணவு வினியோகம் செய்யும் நபர்களும் வர வேண்டாம் என, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது

.நலச்சங்கம் வலியுறுத்தல்

மாதவரம்: மாதவரத்தில், 42 குடியிருப்போர் நலச்சங்கங்களை கொண்ட, குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் நீலக்கண்ணன் மற்றும் கூட்டமைப்பினர் வலியுறுத்தியதாவது: உலகையே மிரட்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாம் அனைவரும், இன்று ஒருநாள் உறவினர்களுடன், நம் வீடுகளில் இருந்து, மக்கள் ஊரடங்கை கொண்டாட வேண்டும். தீமையிலும் ஒரு நன்மை என்பது போல், மொபைல் போன், அலுவல் என இயந்திரத்தனமாக இயங்கிய நாம், 'கொரோனா' பாதிப்பை தவிர்க்க, ஒன்று சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், தாய், தந்தை, குழந்தைகள் என, நம் நெருங்கிய உறவுகளுடன், கலந்து பேசி மகிழ்ந்திருப்போம். 'கண்காணிப்பில் வட மாநிலத்தவர்'வியாசர்பாடி: வியாசர்பாடி, மூர்த்திங்கர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதிக்கப்படாத வகையில், வீடற்றோர், அரசால் அனுமதிக்கப்பட்ட, 51 காப்பகங்களில் தங்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடற்றவர்களை கண்டறிய சமூக நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னையில் பணிபுரிந்து வரும், 9,000க்கும் மேற்பட்ட வடமாநில பணியாளர்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை குறித்து கலெக்டர் மற்றும் மண்டல அதிகாரிகள் கண்காணிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

உணவிற்கு தவிக்கும் மக்கள்சென்னை: சென்னை புறநகரில் உள்ள பல கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இது இல்லாமல், தனியார் கோவில்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதை எதிர்ப்பார்த்து ஏராளமான ஏழை, எளிய மக்கள், யாகசகர்கள் உள்ளனர். கோவில்கள், தொண்டு நிறுவனங்களின் அன்னதான திட்டங்களில் தொய்வு ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக, 'அம்மா' உணவகங்களில் கணிசமான அளவு கூட்டம் அதிகரித்துள்ளது. அம்மா உணவகம் வழக்கம்போல் இன்று இயங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X