பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுக்கள் கிரிமிநாசினி தயாரிப்பு: கலெக்டர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 மகளிர் குழுக்கள் கிரிமிநாசினி தயாரிப்பு:   கலெக்டர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

கடலுார்: மகளிர் குழுக்கள் தயாரித்த கிரிமிநாசினி, முக கவசத்தை கலெக்டர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சந்தையில் கிரிமிநாசினி, முக கவசத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அவை அரசின் பல துறைகள் மற்றும் பொது மக்களுக்கு தடையின்றி கிடைத்திட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மகளிர் குழுக்கள் தயாரித்த கிரிமிநாசினி, முககவசத்தை கலெக்டர் அன்புச்செல்வன் நேற்று பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.கிரிமி நாசினி 1 லிட்டர் ரூ. 404; 500 மில்லி 210; 200 மில்லி 90; 100 மில்லி 45, முக கவசம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 04142-292143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.நிகழ்ச்சியில், கிரிமிநாசினி தயாரிப்பது குறித்து மகளிர் குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியில் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால்சுங்காரா, சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X