பொது செய்தி

தமிழ்நாடு

சோதனையின்றி செல்லும் வாகனங்கள்: மாவட்ட எல்லையில் அதிகாரிகள் அலட்சியம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சிறுபாக்கம்: மாவட்ட எல்லையில் வாகனங்களுக்கு பரிசோதனை செய்து கிருமி நாசினிகள் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. தியேட்டர்கள், வாரச் சந்தைகள், வணிக வளாகங்களை மூடவும், மக்கள் கூட்டமாகவும், நெடுந்துாரம் பயணங்களை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கிராமங்களில் கிருமி நாசினிகளை தெளித்து, சுகாதார நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் - சேலம் சாலையில் மாவட்ட எல்லையான சிறுபாக்கம் சோதனை சாவடியில், வாகனங்களில் எவ்வித பரிசோதனைகளின்றி, சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல் செல்கின்றன.இவ்வழியாக, கேரளா, ஓசூர், தர்மபுரி பகுதிகள் மற்றும் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள் அதிகளவில் செல்கின்றன.மாவட்டத்தின் முக்கிய நுழைவு பகுதியில், கிருமி நாசினி தெளித்து பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.எனவே, மாவட்ட எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினிகள் தெளித்து, பரிசோதனை பணிகள் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X