பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்புச்சுவர் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு

Added : மார் 21, 2020
Share
Advertisement

வேப்பூர்: வேப்பூர் அருகே தடுப்புச்சுவர் மற்றும் தார் சாலை அமைக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு, பால்வளத்துறை மாவட்ட சேர்மன் இனிப்பு வழங்கினார்.வேப்பூர் அடுத்த இலங்கியனூர் ஊராட்சி மணிமுத்தாறு கரையையொட்டி அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கிராமத்தின் இடது கரையில் தடுப்புச்சுவர் கட்டவும், இலங்கியனூர் - காச்சக்குடி வரை தார் சாலை அமைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தடுப்புச்சுவருக்கு ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவக்கவும், இலங்கியனூர் - காச்சக்குடி இடையே ரூ. 76 லட்சத்தில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதை தொடர்ந்து, பால் வளத்துறை மாவட்ட சேர்மன் பச்சமுத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், முதல்வர் பழனிசாமி நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றுகிறார். வரும் 2021ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என கூறினார்.அப்போது, வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் கருப்பையா, ஊராட்சி செயலர்கள் கருப்புசாமி, நாகராஜன், குமணன், பழனிசாமி, பால் கூட்டுறவு செயலர் ஆறுமுகம், கிளை செயலர் அர்ஜூனன்,அ.தி.மு.க., உறுப்பினர்கள் சடையமுத்து, பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X