பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

Added : மார் 21, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
Corona, Death, கொரோனா, தாக்கம், பாதிப்பு, ஜோதிடர், பரணிதரன் , கணிப்பு, நம்பிக்கை

.''கொரோனா தாக்கம், வரும், 28க்கு பின் குறையும்,'' என, சென்னையை சேர்ந்த, பிரபல ஜோதிடர், பரணிதரன் நம்பிக்கை தெரிவித்தார்.

நம் நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:

கால சக்கரத்தில், பாக்கிய ஸ்தானம் எனும், தனுசு ராசியில், விகாரி ஆண்டு துவங்கியது முதல், ஆயுள், நோய்களுக்கு அதிபதியான சனி பகவானும், ஞான மோட்சக்காரகனான கேது பகவானும், சஞ்சரித்துவருகின்றனர். கேது அன்னிய மொழிகளுக்கும், அன்னிய சேதங்களுக்கும் ஒப்பிடக்கூடியவர். விகாரி ஆண்டு துவங்கியது முதல், அன்னிய நாடுகளால், நம்முடைய நாடு பிரச்னைகளை சந்தித்து வந்தது.

கடந்த, 2019 அக்., 29ல், குரு பகவான் பெயர்ச்சியாகி, தனுசுவிற்கு வர, அன்று முதல் பிரம்மஹத்தி தோஷம் என்ற நிலை நாட்டிற்கும், அன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கும் என்றானது. பிரம்மஹத்தி தோஷம் காலத்தில், அரசுக்கு எதிரான போராட்டங்கள், இனம்புரியாத பயம், அன்னிய நாடுகளின் வழியே ஆபத்தான நிலை என்றெல்லாம் உருவாகும் என்பது விதி.

இந்நிலையில், பிப்., 9 முதல், ருணரோக காரகத்திற்கு அதிபதியான செவ்வாயும், சனி, கேது, குருவுடன் இணைய, அன்னிய தேசத்தில் உருவான, இனம் புரியாத நோயால், நம் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதன் முடிவு என்ன என்று, தெரிந்து கொள்ளும்போது, வரும், 23ல் செவ்வாய் பகவான், இடம் பெயர்ச்சியாக, மகரத்திற்கு செல்கிறார்.

இதன் காரணமாக, இப்போது உண்டாகியுள்ள, அச்சம் தணியும். கொரோனா தாக்கத்தில் இருந்து, விடுபடுவதற்கான நிலை உருவாகும்.இதற்கும் மேலாக, வரும், 28ல் குரு பகவான், அதி சாரமாக சனி பகவானை விட்டு, மகரத்திற்கு செல்கிறார் என்பதால், நாட்டிற்கும், மக்களுக்கும் உண்டாகியிருந்த, பிரம்மஹத்தி தோஷம் முடிவிற்கு வருகிறது.

தன் காரணமாக, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், அனைத்தும் ஒரு கட்டிற்குள் வரும். போராட்ட சூழல் மறையும்; பேரிடர் காலம் முடியும். அரசின் மீது, மக்கள் நம்பிக்கை கொள்ளும் வழி உண்டாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil - Tirupur,இந்தியா
28-மார்-202012:01:49 IST Report Abuse
senthil why these astrologers didn't fore Corana in advance ? they could have alerted the nation well in advance
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-மார்-202018:53:35 IST Report Abuse
தாண்டவக்கோன் சோசியனுங்க எதுனாச்சும் ஒரு பரிகாரத்தெ சொல்லி கொரோனாவெ ஒரேடியா ஒளிச்சிப்புடலாமே ‼️
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
25-மார்-202015:52:33 IST Report Abuse
N.K //அரசின் மீது, மக்கள் நம்பிக்கை கொள்ளும் வழி உண்டாகும்.// இது மிக அவசியம். நானும் பத்து நாட்களுக்கு முன் ஜெர்மனியில் இருந்து வந்தேன். ஒருநாள் பூந்தமல்லியில் சோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறி அனுப்பிவிட்டனர். தினமும் அங்கிருந்து இருவரும், எங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிகுறி எதுவும் இருக்கிறதா என்று கேட்டறிகின்றனர். நான் அங்கே பூந்தமல்லியில் இருந்தபொழுது, அரசின் உயர் அலுவலர்கள் முதல், சுத்தம் செய்யும் கடைநிலை ஊழியர்கள் வரை, நமது சுகாதார அமைச்சர் மற்றும் முதல்வரும் கூட மிக அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதை உணர்ந்தேன். சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். இருப்பினும், ஒரு சிலர் வீட்டில் தனிமையில் இருப்பதை கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்காமல் வெளியே செல்வது வருத்தம் அளிக்கிறது. அரசு எந்திரம் மீது எனக்கு ஏற்கனவே இருந்த நம்பிக்கை பன்மடங்காகி இருக்கிறது. மக்கள் அவர்கள் பிரச்சனைகளுக்கு அவர்களே காரணம் ஆகிறார்கள், அரசை குறைசொல்வதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். அரசாங்க ஊழியர்களுக்கு ஒத்துழைப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X