பொது செய்தி

தமிழ்நாடு

முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்க பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அறிவுரை

Added : மார் 21, 2020
Share
Advertisement
 முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்க  பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அறிவுரை

பரங்கிப்பேட்டை: கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக, முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அறிவுறுத்தினார்.

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்துஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன் தலைமை தாங்கி, பேசுகையில், 'கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில், வரும்31ம் தேதி வரை தினமும் ஆட்டோ பிரசாரம், கை கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கவேண்டும்.பொதுமக்கள் வந்துசெல்லும் பஸ் நிலையம், ஏ.டி.எம்., சென்டர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் கையை கழுவிட்டு செல்லும் வகையில், வாஷ்பேசின் வைக்க வேண்டும். பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் அனைத்து கிராமங்கள், பேரூராட்சி பகுதிகளில் கிறுமி நாசினி தெளிக்க வேண்டும்.பஸ் நிலையங்களில் கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் தினமும் குளேரினேஷன் செய்ய வேண்டும்' என்றார்.

கூட்டத்தில், பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு, செயல் அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், துணை பி.டி.ஓ.,க்கள் பானுமதி, சங்கர், சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X