பொது செய்தி

தமிழ்நாடு

நோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள் ஆனந்தபவன் குரூப் வழங்கல்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 நோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள் ஆனந்தபவன் குரூப் வழங்கல்

கடலுார்: ஆனந்த பவன் குரூப் சார்பில், சுக்கு காபி மற்றும் தமிழர்களின் பாரம்பரிய பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கடலுார் மற்றும் புதுச்சேரி மாநிலம் காட்டுக்குப்பத்தில் உள்ள ஆனந்தபவன் ஓட்டல் வாயிலில், சுக்கு காபி, வெற்றிலை, மிளகு, துளசி ஆகிய பாரம்பரியமான பொருட்கள் பொது மக்களுக்கு இலவசமாக ஆனந்தபவன் குரூப் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன் வழங்கி துவக்கி வைத்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஆனந்தபவன் குரூப் சார்பில் எங்கள் அனைத்து ஓட்டல்களிலும் தமிழர் பாரம்பரிய உணவுப் பொருட்களான சுக்கு காபி, மிளகு, வெற்றிலை, துளசி இலவசமாக பொதுமக்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.இந்து உணவு பொருட்கள் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி தற்காத்துக் கொள்ளலாம். எங்கள் ஒட்டல் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணி செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கி வருகிறோம்.எனவே, ஒட்டல் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழர் பாரம்பரியமான உணவு பொருட்களை சாப்பிட்டு பயன்பெற வேண்டும்' என, தெரிவித்தனர்.பாரம்பரிய உணவு பொருட்களை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி உட்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X