பொது செய்தி

தமிழ்நாடு

சனி பிரதோஷ வழிபாடு விருதையில் பக்தர்களுக்கு தடை

Added : மார் 21, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: கொரோனா அச்சம் காரணமாக, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.கொரோனா பாதிப்பை தவிர்க்க நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் சிறப்பு திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10:30 மணிக்கு மேல் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பிரதோஷத்தின்போது நடக்கும் அனைத்து சிறப்பு வழிபாடுகளும் நடந்தன.இதனால் வழக்கம்போல் சனி பிரதோஷ தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து கோவில் வாசலில் நின்றபடி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X