ஜார்க்கண்ட், 'மாஜி' அமைச்சர் குற்றவாளி என அறிவிப்பு

Added : மார் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ராஞ்சி:சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர், அனோஷ் எக்காவை குற்றவாளி என, ஜார்க்கண்ட் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜார்க்கண்டில், 2006 - 08ம் ஆண்டு வரை, முதல்வராக இருந்தவர் மது கோடா. சுயேச்சை எம்.எல்.,வாக இருந்த மதுகோடா, காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வரானார். இவரது அரசில், கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் அனோஷ் எக்கா. பறிமுதல்மதுகோடா ஆட்சியில் பல ஊழல்கள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், மது கோடா உட்பட பலர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகளை, அமலாக்கத்துறை பதிவு செய்தது.
இதில், ஒரு வழக்கில் கைதான அனோஷ் எக்காவின், 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, 2014ல், அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏழு ஆண்டுஇந்த வழக்கில், அனோஷ் எக்காவை, குற்றவாளி என, நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அவருக்கான தண்டனை விபரம், 31ம் தேதி அறிவிக்கப்படும் என, தெரிவித்தது
.மது கோடா தொடர்பான ஊழல் வழக்குகளில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இது. இதற்கு முன், மதுகோடா அரசில், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஹரி நாராயண் ராய்க்கு, கடந்த, 2017ல், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மார்-202010:01:35 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எப்போ ஜாதியை வைத்து சலுகையைக் காட்டி நிர்வாகம் செய்ய அரசு தலைபட்டதோ அன்றைய தினம்முதல் தூய்மை நிர்வாகம் கரைந்து வருகிறது என்லாம் .திறமை அறிவுக்கு ஏற்றபணி அளித்தால்தான் சிறப்பான நல் நிர்வாகம் இனி காணமுடியும்.இல்லையேல் ஊழல்களைத்தான் காணமுடியும்.குற்றங்கள் தான்அதிகம் நடந்தேறும்.அறிவிற்கும் ஆற்றலுக்கும் என்று முன்னுரிமை அளிக்கப்படுபிறதோ அன்றுதான் சட்டத்தைமதித்து நடக்கும் மக்களை காணமுடியும்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-மார்-202009:45:17 IST Report Abuse
ஆரூர் ரங் காங்கிரஸ் ஆதரவுடன் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் அனோஷ் எக்கா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X